மும்பை: நஷ்டத்தில் செயல்படும் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் திங்கட்கிழமை அறிவித்த ரூ.499 என்ற சலுகையில் ஒரே நாளில் சமார் 1 இலட்சம் டிக்கெட்டை விற்பனை செய்து இத்துறையில் புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்தில் இந்நிறுவனம் சுமார் 5 முறை சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த 499 ரூபாய் சலுகை திட்டம் புதன்கிழமை வரை உள்ளது குறிப்பிடதக்கது.
கலாநிதி மாறன்
சலுகை விலை திட்டங்களால் கலாநிதி மாறன் நடத்தும் நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் கடந்த நான்கு காலண்டுகளாக தொடர் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் அதிகப்படியாக 124.10 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ரூ.499 சுலுகை திட்டம்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது உள்நாட்டு பயணத்திற்கு 499 ரூபாய் என்ற சலுகையை அளித்தாலும், எரிபொருள் செலவு, வரி மற்றும் இதர கட்டணங்களும் உள்ளது. இதனால் டிக்கெட் விலை 800 ரூபாய் வரை உயர்கிறது.
சலுகை திட்டத்தால் என்ன லாபம்...
இத்தகைய சலுகை திட்டங்களால் இந்திய வான்வழி போக்குவரத்தை உக்குவிக்கும் மேலும், விமானத்தில் அனைத்து இருக்கைகளும் புக் செய்யப்படும், மேலும் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உடனடியாக பணத்தை திரட்ட முடியும் என இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2 மாதத்தில் 5 சலுகை திட்டங்கள்
கடந்த 2 மாதத்தில் இந்நிறுவனம் சுமார் ஐந்து முறை சலுகை திட்டஙகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி 499 ரூபாய் திட்டம், ஆகஸ்ட் 25ஆம் தேதி 1,888 ரூபாய் சலுகை திட்டம், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2,199 ரூபாய் சலுகை திட்டம், ஆகஸ்ட 1ஆம் தேதி 1,499 ரூபாய் சலுகை திட்டம், ஜூலை 15ஆம் தேதி 1,699 ரூபாய் சலுகை திட்டம்
நஷ்டம்
நியூட்டன் 3ஆம் விதி போல் அதிரடியான சலுகை திட்டங்களுக்கும் ஈடாக 2014ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 124.10 கோடி நஷ்டத்தை சந்தித்தது. அதேபோல் கடந்த வருடம் சந்தையில் இந்நிறுவன பங்குகள் உயர்வை சந்தித்த போதும் வருவாய் 1,678.59 கோடியாக சரிந்தது.
மொத்த கடன்
ஜூன் 30ஆம் தேதி கணக்கெடுப்பின் போது இந்நிறுவனத்தின் மொத்த கடன் சொத்து மதிப்பை விட 145.58 கோடி அதிகமாக இருந்தது.


Click it and Unblock the Notifications