டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியா மற்றும் ரஷ்ய இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகளை தனது நட்பு நாடான வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு ஆயுத ஏற்றமதியை குறிவைத்த இந்திய பாதுகாப்பு துறையில் அதிகப்படியான அன்னிய முதலீட்டுக்கும் ஒப்புதல் அளித்தது குறிப்பிடதக்கது. ஆயுத ஏற்றுமதியின் மூலம் அதிகப்படியான வருமான பெருக்க முடிவு செய்துள்ள மத்திய அரசின் முதல் படி அது.
பல ஆண்டு முயற்சி
இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையே இருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி சில ஆண்டுகள் முன்பிருந்தே காங்கிரஸ் ஆட்சியில் ஏவுகணைகளை வாங்க வியட்நாம் முயற்சி செய்தது. காங்கிரஸ் கட்சியின் மெத்தனப்போக்கினால் இது கிட்டவில்லை.
செப்டம்பர் 14ஆம் தேதி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார். இப்பயணத்தின் போது பிரமோஸ் ஏவுகணை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்தியா
இந்த பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியாவின் முப்படையிலும் உபயோகப்படுத்தப் படுகிறது. மேலும் ஏவுகணைகளை இந்தியவின் நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் ரஷ்ய அனுமதி அளித்துள்ளது. இந்த பிரமோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் வரை கடந்து சென்று இலக்கை தாக்கும் திறன் உடையது.
ஆயுத உற்பத்தி
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பில் வந்து 100 நாள் ஆன நிலையில், ஆயுத உற்பத்தியை முழு வேத்தில் செயல்படுத்தி வருகிறார்.
நட்பு நாடுகள்
மேலும் நட்பு நாடுகள் ஆயுத தயாரிப்பில் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்படுத்தவும் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு துறையில் தொழிற்நுட்ப வளர்ச்சியும், உற்பத்தியும் அதிகரிக்கும்.
ஏற்றுமதி
இதற்கு முன் இந்தியா நேப்பால் மற்றும் ஒமன் நாடுகளுக்கு துப்பாக்கியும், மியான்மர் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பாதுகாப்பு சாதனங்களும், இலங்கைக்கு ரேடார்களும், மொரிஷியஸ் நாட்டிற்கு கடல் ரோந்துக்குப் பயண்படுத்தும் கப்பல்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் மதிப்பிலும் திறனிலும் சக்தி வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறை.
இந்தியாவிற்கு பாதுகாப்பு
இந்திய பாதுகாப்பு துறையின் வளர்ச்சி கண்டிப்பாக நாட்டிற்கு வலிமையை அளிக்கும். மேலும் ஆயுத ஏற்றுமதியின் மூலம் அதிகப்படியான வருவாய் கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications