பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவான விஷால் சிக்கா, தான் பணியாற்றிய சாப் நிறுவனத்தில் இருந்த நெருங்கிய நன்பர்கள் இருவரை இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பதவியில் அமர்த்தியுள்ளார்.
விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ பதவியேற்றிய பின்னர் உயர் பதவிகளில் அமர்த்தப்படும் முதல் அதிகாரிகள் இவர்கள் தான். இந்நிறுவனத்தில் சிக்காவின் புதிய முயற்சிகளில் உறுதுணையாக இருக்க சாப் நிறுவனத்தின் மைக்கேல் ரே மற்றும் சஞ்சய் ராஜகோபாலன் ஆகியோர் அவருடன் இணைந்துள்ளனர்.
சாப் நிறுவனத்தில் விஷால் சிக்கா
விஷால் சிக்கா அவர்கள் சாப் நிறுவனத்தில் பணியாற்றிய போது, அவரது தலைமையில் இருந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரி குழுவில் மைக்கேல் ரே மற்றும் சஞ்சய் ராஜகோபாலன் ஆகிய இருவரும் இருந்தனர் என விஷால் சிக்கா தெரிவித்துள்ளாது. இன்போசிஸ் நிறுவனத்தில் இவர்கள் இணைவதின் மூலம் நிறுவனத்தில் புதிய முயற்சிகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மைக்கேல் ரே
இவர் சாப் நிறுவனத்தின் தகவல் மற்றும் தொழிற்நூட்ப வர்த்தக பிரிவின் துணை தலைவராக இருந்தவர். இவரது தலைமையில் நிறுவன பொருட்களின் வர்த்தகம் இந்தியாவிலும், ஆசிய சந்தையிலும் உச்சத்தை தொட்டது. மேலும் இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்வது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் "லைப் இஸ் ஷாட், வொர்க் சம்வேர் ஆவ்சம்" என தெரிவித்து இருந்தார்.
சஞ்சய் ராஜகோபாலன்
இதே நிறுவனத்தில் சஞ்சய் ராஜகோபாலன் டிசைன் மற்றும் சிறப்பு திட்ட பிரிவின் தலைவராக இருந்தவர்.
உயர் துணை தலைவர் பதவி..
இது குறித்து இன்போசி ஸ் நிறுவனத்தை அனுகியபோது, மைக்கேல் ரே மற்றும் சஞ்சய் ராஜகோபாலன் ஆகியோர் தத்தம் ஜெர்மனி மற்றும் அமெரிக்க இன்போசிஸ் நிறுவனங்களில் உயர் துணை தலைவர் பதவி வகிப்பர் என தெரிவித்தது. மேலும் இதுக்குறித்து எந்த விதமான தகவல்களும் இன்போசிஸ் வெளியிடவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications