அமெரிக்காவை போல் இந்தியாவில் தடையில்லா மின்சாரம்!! மின்சாரத்துறை அமைச்சர்

டெல்லி: இந்தியாவில் தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடையில்லா மின்சாரத்தை வழங்க மத்திய மின்சாரத்துறை திட்டம் தீட்டித் தயாராக உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்க்கத்திய நாடுகளை போல இந்தியாவும் மின்சார தடையில்லா நாடாக மாற்றுவதற்கு முதல் படி எனவும் இத்துறை அமைச்சகர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவர் தடையில்லா மின்சாரத் திட்டதை பற்றி தெரிவித்தார். மேலும் அவர் இதற்கான திட்டம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மின்சார பிரச்சனை

மின்சார பிரச்சனை

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றிய 100 நாட்களில் நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை குறித்து பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம் மாநில முதல்வர்கள் மற்றும் டெல்லி லெப்டினன்ட் ஜெனரல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நிலக்கரி சுரங்க விவகாரம்

நிலக்கரி சுரங்க விவகாரம்

இந்தியாவில் 1993 முதல் 2010ஆம் ஆண்டு வரை நடந்த சுரங்க ஒதுக்கீட்டுகள் அனைத்தும் முறைக்கேடானவே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தகைய ஒதுக்கீட்டால் மத்திய அரசிற்கு சுமார் 1.86 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சிபிஐ விசாரனை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தியில் தடை

மின் உற்பத்தியில் தடை

ஊழல் பிரச்சனையால் உச்ச நீதிமன்றம் இந்தியாவில் 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கிட்டை செய்துள்ளது, இதனால் நாட்டில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கோயல் தெரிவித்தார். மேலும் அவர் எங்களது திட்டங்கள் அனைத்தும் தயாராக உள்ளது, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் என கூறினார்.

நிலக்கரி உற்பத்தி

நிலக்கரி உற்பத்தி

கடந்த ஆண்டு 40 சுரங்கங்களில் 37 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளோம், நடப்பு நிதியாண்டில் அதை 40 மில்லியன் வரை உச்சத்த திட்டமிட்டுள்ளோம் இதற்கான அனைத்து பணிகளும் தயராகி வருகிறது. மேலும் புதிய 6 சுரங்கங்கள் உற்பத்திக்காக தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்நூட்ப முன்னேற்றம்

தொழிற்நூட்ப முன்னேற்றம்

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் சில மின் உற்பத்தி ஆலைகளில் 25 ஆண்டு பழமையான தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். இதை சூப்பர் அல்ட்ரா கிரிட்டிக்கள் தெர்மல் ஆலையாக மாற்ற முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மின்சாரத் திருட்டு

மின்சாரத் திருட்டு

மேலும் அவர் நாட்டில் மின்சார உற்பத்தி நாளுக்கு நாள் உச்சந்து வருகையில், மின்சார திருட்டும் உச்சந்து வருகிறது. இதை தடுக்க கடுமையா சட்டதிட்டங்கள் அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+