டோக்கியோ: ஸுசுகி மோட்டர் கார்ப் நிறுவனம் தான் உருவாக்கிக் கொண்டு இருக்கும் புதிய தொழிற்சாலையை சிறந்த கட்டமைப்புகள் மற்றும் மின்சார வசதிகளைக் கருத்தில் கொண்டு தான் குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்சாலையை வரும் 2017ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
"தன்னுடைய புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்காக இந்நிறுவனம் நல்ல மின்சாரம் கட்டுப்பாடுகள் மற்றும் வர்த்தகத்திற்கு எதுவான சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் கொண்ட மாநிலத்தை தேடும்போது குஜராத் மாநிலம் அமைந்தது" என அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒசாமு ஸுசுகி தெரிவித்தார்.
உற்பத்தி அதிகரிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயனத்தின்போது நடந்த வர்த்தக மாநாட்டில் அவர் தெரிவிக்கையில் "குஜராத் ஆலையின் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணி வரும் 2017 ஆம் ஆண்டிற்குள் முடிவடையும்" என்றார்.
வருடத்திற்கு 30 லட்சம் கார்கள்
ஸுசுகி நிறுவனத்தின் குஜராத் ஆலைத் திட்டம் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மொத்தத் திறன் அதனுடைய குர்கான் மற்றும் மனேசர் துணை நிறுவனங்களான மாருதி ஸுசுகி இந்தியா லிமிடெட்டின் தொழிற்சாலைகளைச் சேர்த்து ஆண்டிற்கு தற்போதுள்ள 15 லட்சம் யூனிட்டுகளிலிருந்து 30 லட்சம் யூனிட்டுகளாக உயரும்.
வருவாய்
இத்தொழிற்சாலையில் வருடத்திற்கு 30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து அதில் அதிகப்படியானவற்றை ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்பிடான வர்த்தக வருவாய் பெற முடியும், மேலும் வேலைவாய்ப்பு உருவாகும்.
முதலீட்டாளர்கள்
கடந்த மார்ச் மாதம், முதலீட்டாளர்களின் அழுத்தத்தின் காரணமாக மாருதி ஸுசுகி குஜராத் திட்டத்தில் சில மாறுதல்களை செய்தபின் சிறுபான்மை முதலீட்டாளர்களின் அனுமதியைப் பெறவுள்ளது.
உற்பத்தி ஒப்பந்தத்தை ரத்து!!
இந்த குஜராத் உற்பத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேர்ந்தால், குஜராத் ஆலையில் உள்ள உற்பத்தி கட்டமைப்புகள் மாருதி ஸுசுகி நிறுவனத்திற்கு முன்பு கூறப்பட்ட முகப்பு விலையில் அல்லாமல் கணக்கு ஏட்டின் விலையின் படி மாற்றப்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications