அரசு தொலைதொடர்பு நிறுவனங்களின் இணைப்பில் இறுதி முடிவு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நீண்ட காலமாக விவாதத்தில் மட்டும் இருந்து வந்த மத்திய தொலைதொடர்பு நிறுவனங்களின் இணைப்பு பற்றி மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இறுதி முடிவுக்கு வந்துள்ளது.

 

(READ: Gold "zero" returns in last one year, shares gain 50%; What to buy now?)

பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மஹாநகர் டெலிஃபோன் நிகம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகிய மத்திய அரசு நிறுவனங்களை இணைப்பதற்கு இறுதியாக 2015 ஆம் ஆண்டின் ஜுலை 31 ஆம் தேதி இறுதி நாளாக தீர்மானித்துள்ளது தொலைதொடர்பு அமைச்சகம்.

அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த விளக்க உரையில், தொலைத் தொடர்புத் துறை "அடுத்த வருடம் ஜுன் 30 ஆம் தேதிக்குள் இந்த இரு நிறுவனங்களின் ஒன்றினைப்பிற்கான அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவுள்ளதாக" தெரிவித்தது என எகனாமிக் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

 இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

எம்டிஎன்எல் டெல்லி மற்றும் மும்பை நகரங்களிலும் பிஎஸ்என்எல் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன.

நஷ்டம்

நஷ்டம்

இந்தியவில் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் இருக்கிறது இதில் அனைத்தும் லாபங்களை மட்டுமே சந்தித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் பல காலாண்டுகளாக நட்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. மோடி அவர்களின் பார்வையில் அனைத்து அரசு நிறுவனங்களுடன் லாபத்துடன் செயல்பட வேண்டும் என்பதே ஆகும்.

இணைப்பு
 

இணைப்பு

இந்த ஒன்றினைப்பிற்கான பணிகளில், தொலைத்தொடர்புத்துறை நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இவ்விரு நிறுவன மறுகட்டமைப்பு முயற்சிகளை செய்வதற்கான கூடுதல் கால கெடுக்களையும் தீர்மானித்துள்ளது, உதாரணமாக, பிஎஸ்என்எல் நிறுவன மொபைல் டவர்களை முற்றிலுமாக புதிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மேலும் இவ்விரு நிறுவனங்களின் சொத்துக்களையும் சட்ட ஆவனப்படுத்தவும் செய்து அதன் மூலம் புதிய நிறுவனத்தின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கவும் இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதியை கெடுவாக நிர்ணயித்துள்ளதாக அந்த விளக்க உரையில் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

பழைய டெக்னாலஜி

பழைய டெக்னாலஜி

பிஎஸ்என்எல் தன்வசம் 61,622 மொபைல் டவர்களுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய டவர் உரிமையாளராக உள்ளது. இதில் ஒரு பெரும் பகுதி தரைவழி தொலைபேசி இணைப்பகங்களுடன் இணைக்கப்பட்டு வர்த்தகப் பயன்பாடுகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சொத்துகள்

சொத்துகள்

மேலும், நாட்டிலேயே மிக அதிகமான நிலங்களை சொந்தமாக வைத்துள்ள ஒரு அரசு நிறுவனமாகவும் பிஎஸ்என்எல் திகழ்வதுடன், இந்த சொத்துக்கள் 3500 நகரங்களில் பறந்து விரிந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பெருமானமுள்ளவைகளாகவும் உள்ளன.

நிதி திரட்டுதல்

நிதி திரட்டுதல்

நிதியைத் திரட்டவும் நட்டங்களைக் குறைக்கவும், தன் வசம் உள்ள நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலமும், தன்னுடைய தொலைத் தொடர்புச் சாதனத் தொழிற்சாலைகளை ஒப்பந்த உற்பத்திக்கு அனுமதிப்பதன் மூலமும் சுமார் 500 கோடி ரூபாயை திரட்ட உள்ளதாக அண்மையில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்டிஎன்எல் நிறுவனம்

எம்டிஎன்எல் நிறுவனம்

எம்டிஎன்எல் நிறுவன நிலம் மற்றும் கட்டிட மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய்க்கும் மேல் பெறும் என அந்த நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவன சொத்துகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL and MTNL to be merged by July 2015

The telecom department (DoT) has for the first time set a cutoff date—July 31, 2015—for concluding the much discussed merger of struggling state-run telecom companies, Bharat Sanchar Nigam Ltd and Mahanagar Telephone Nigam Ltd.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X