சென்னை: இந்திய பொருளாதாரத்திற்கு பக்க பலமாக இருக்கும்... ஏன் தூண்களாக இருக்கும் இந்திய நிறுவனங்களின் சக்தி வாய்ந்த சீஇஓ பட்டியலை எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது.
(READ: Gold "zero" returns in last one year, shares gain 50%; What to buy now?)
இப்பட்டியலில் சில மாதங்களுக்கு முன் நிறுவன பொறுப்புகளில் இருந்து வெளியேறிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி இவ்வருடத்திற்கான மிக சக்திவாய்ந்த சீஇஓக்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இப்பட்டியலில் பல தகவல்கள் உள்ளது.. தொடர்ந்து படிக்கலாம் வாங்க..
சாப்ட்வேர் டான்கள்!!
முதல் 15 இடங்களில் நான்கு சாப்ட்வேர் டான்கள் உள்ளனர், இன்போசிஸ் நாரணயனமூர்த்தி (1), விப்ரோ அசிம் பிரேம்ஜி (4), டாடா கன்சல்டன்சி சர்விசஸ் என். சந்திரசேகரன் (9), ஹெச்.சி.எல் சிவ நாடார் (14) ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.
வங்கித்துறையில் தல...
சாப்ட்வேர் துறையை போலவே வங்கிதுறையும் இப்பட்டியலில் அதிகப்படியான இடங்களை பிடித்துள்ளது, மேலும் 2014ஆம் நிதியாண்டில் நாட்டில் வங்கித் துறையில் சிறப்பான வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதிலும் முக்கியமாக தனியார் வங்கி இதில் முக்கிய இடங்களை பிடித்துள்ளனர். ஐசிஐசிஐ சந்தா கோச்சார் (7), ஹெச்.டி.எஃப். சி தீபக் பராக் (10), எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா (12), கோட்டாக் மஹிந்திரா ஊதை கோட்டாக் (16), ஹெச்.டி.எஃப். சி வங்கியின் ஆதித்யா பூரி (18), அக்சிஸ் வங்கி ஷிக்கா சர்மா (23)
ரிலையன்ஸ் ப்ரோஸ்...
இந்திய நிறுவனங்களை பற்றி எந்த ஒரு கணிப்புகள், புள்ளி விபரங்கள், பட்டியல் வந்தாலும் இவர்களின் பெயர் இதில் இருக்கும். இந்த பட்டியல் மட்டும் என்ன விதிவிளக்கா என்ன. இதில் முகேஷ் அம்பானி 2வது இடத்தையும், அனில் அம்பானி 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
புதியதாக வந்தவர்கள்
எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இப்பட்டியில் இவ்வருடம் புதிதாக சுமார் 16 பேர் நுழைந்துள்ளனர்.
மேலும் இப்பட்டியலில் டாப் பத்து இடங்களை பட்டித்தவர்களை பார்போம்...
நாரயணமூர்த்தி
கடந்த வருடம் இப்பட்டியலில் இடம் பெறாத நாராயணமூர்த்தி இவ்வருடம் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
இந்திய சந்தையின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
குமார மங்களம் பிர்லா
அதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார மங்களம் பிர்லா இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை சிபிஐ தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
அசிம் பிரேம்ஜி
ஐடி துறையில் இன்போசிஸ் நிறவனத்திற்கு கடுமையான போட்டியை அளிக்கும் விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ அசிம் பிரேம்ஜி இப்பட்டியலில் 4வது இடத்தைபிடித்துள்ளார்.
அனில் அம்பானி
இந்தியாவில் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் வங்கி திறக்க அரும்பாடுபடும் முகேஷ் அம்பானியின் சகோதரன் அனில் அம்பானி 5வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
அனில் அம்பானியை தொடர்ந்து, பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை ஆதரிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா 6 வது இடத்தை பிடித்துள்ளர்.
பெண் தலைவர்
ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், டாப் 10 இடங்களில் இருக்கும் ஒரே பெண் தலைவர் இவர் தான்.
அடுத்த இடங்கள்
இவரை தொடர்ந்து டாப் 10 இடங்களில் ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், டிசிஎஸ் தலைவர் என். சந்திரசேகரன், ஹெச்.டி.எஃப். சி தீபக் பராக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications