டெல்லி: சுனில் மிட்டல் தலைமை வகிக்கும் பார்தி எர்டெல் நிறுவனம் சுமார் 6 ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள 3,500 மொபைல் டவர்களை செலவு குறைப்பு காரணமாக ஈட்டன் டவர்ஸ் நிறுவனத்திற்கு குத்தகை விடுத்துள்ளது இந்நிறுவனம்.
இந்த குத்தகை ஒப்பந்தக் காலம் 10 வருடம் ஆகும், இக்காலக்கெடும் முடிந்த பின் டவர்கள் அனைத்தும் ஏர்டெல் நிறுவனம் கைபற்றும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இரு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்திற்கான மதிப்பை வெளியிட மறுத்துவிட்டது. மேலும் இந்த ஒப்பந்த அப்பிரிக்க நாட்டின் தொலைதொடர்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூலை மாதம் இதே ஏர்டெல் நிறுவனம் சுமார் 3,100 மொபைல் டவர்களை ஹிலியோஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு விற்பதாக அறிவித்தது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டது ஏர்டெல் நிறுவனம் தான். இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் தொலைதொடர்பு சேவையை அளித்து வருகிறது.
மும்பை பங்கு சந்தையில் இன்று இந்நிறுவன பங்குகள் சுமார் 0.66 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications