அன்னிய நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் பிரதமரின் திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பிரதமரின் ஜன் தண் யோஜ்னா திட்டத்தின் படி அடுத்த 100 நாட்களில் இந்தியாவில் 7.5 கோடி வங்கி கணக்கு திறக்கப்பட உள்ளது, இத்திட்டத்தின் கீழ் திறக்கப்படும் கணக்காளர்கள் அனைவருக்கும் ரூபே வங்கி அட்டைகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூபே (RUPAY) என்னும் இணைய வழி பரிமாற்றத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு அடுத்த படியாக இந்திய நாடு தான் சொந்த பிரிமாற்ற நுழைவு முறையை பயன்படுத்தி வருகிறது. மேலும் உலகின் பிற நாடுகள் வங்கி பிரிமாற்ற சேவைக்காக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனாவை நம்பி உள்ளது.

அமெரிக்காவின் ஆதிக்கம்
 

அமெரிக்காவின் ஆதிக்கம்

ஜப்பான் மற்றும் சீன நாடுகள் வங்கி சேவை முழுவதும் தனது நாட்டு மொழிகளிலேயே உள்ளது, மேலும் அவர்களின் செயல்பாட்டு முறை பயன்பாட்டிற்கு கடினமாக உள்ளதால். உலக நாடுகள் (இந்தியாவை சேர்த்து...) அனைத்தும் இணைய வழி வங்கி பரிமாற்றத்தில் அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவனங்களை மட்டுமே நம்பியுள்ளது.

அமெரிக்காவை நம்பினால் என்ன??

அமெரிக்காவை நம்பினால் என்ன??

இந்த கேள்விக்கு சரியான உதாரணம் ரஷ்யா தான். வங்கி பரிமாற்றத்தில் அமெரிக்காவை மட்டும் முழுமையாக நம்பியிருந்ததால் சில பொருளாதார தடைகளில் காரணமாக, அமெரிக்கா ரஷ்ய நாட்டின் சில முக்கிய தலைவர்கள் மற்றும் வியாபாரிகளின் கணக்கை முடக்கியது இதனால் ரஷ்யா மிக்பெரிய பொருளாதார நெருக்கடியை சில மாதங்களுக்கும் முன் சந்தித்தது. இப்பிரச்சனையை பற்றி முழுமையாக அறிய இதை கிளிக் செய்யவும்..

தலைவலி தீர்ந்ததா??

தலைவலி தீர்ந்ததா??

இப்பிரச்சனையில் நேரடியாக களமிறங்கிய ரஷ்ய பிரதமர் புடின் கூறுகையில், இனி ரஷ்யா எந்த ஒரு துறையும் அமெரிக்க நிறுவனங்களை சார்ந்து இருக்க கூடாது, வரைவாக ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளை போன்று சொந்த பண பரிமாற்ற நுழைவை (Payment Gateway) தயாரிக்கும் பணியில் உடனடியாக இறங்கும் என தெரிவித்தார்.

இந்தியா
 

இந்தியா

இத்தகைய பிரச்சனையை முதலேயே சுதாரித்த இந்தியா ரூபே என்னும் பண பரிமாற்ற நுழைவை உருவாக்கியது. ஆனால் இந்தியாவில் இது பிரபலம் ஆகாமல் இருந்தது குறிப்பிடதக்கது. பிரதமரின் இத்திட்டத்தின் மூலம் இதன் பயண்பாடு அதிகரிக்கும் மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இதனை பயண்படுத்த துவங்குவார்கள்.

நேஷ்னல் மேபென்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா

நேஷ்னல் மேபென்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா

ரூபே என்னும் பணப்பரிமாற்ற நுழைவை உருவாக்கிய நேஷ்னல் மேபென்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கணிப்புகளின் படி நடப்பு நிதியாண்டில் இறுதிக்குள் சுமார் 6 கோடி வாடிக்கையாளர்களை பெறும் என்றும், அடித்த நிதியாண்டில் மேலும் 10 கோடி வாடிக்கையாளர்களை இணைக்கும் பணியில் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் இதுவரை 1.9 கோடி கிரேடிட் கார்டுகள் மற்றும் 40 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளது எனவும், அவை அனைத்தும் மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவனங்களை சர்ந்ததுள்ளது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

போட்டி

போட்டி

இந்நிலையில் நேஷ்னல் மேபென்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு மாஸ்டர்கார்டு மற்றும் விசா போன்ற நிறுவனங்கள் போட்டியில்லை, இவை இரண்டும் உலக நாடுகள் முழுவதும் செயல்பட்டு வருகிறது. பல டிரில்லியன் டாலர் முதலீடும், பல இலட்சம் கோடி இலாபம் பெற்று வரும் இந்நிறுவனத்திடம், வெறும் 100 கோடி ரூபாய் முதலீடு கொண்ட நிறுவனம் போட்டி போட முடியாது எனவும் இந்நிறுவத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆதிக்கம்..

இந்தியாவில் ஆதிக்கம்..

அடுத்த 5 வருடங்களில் பிரதமரின் ஜன் தண் யோஜனா திட்டத்தின் மூலம் இந்தியாவில் ரூபே நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதே முக்கிய பணி, இதன் மூலம் மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவனங்களுக்கு இந்தியாவில் போட்டி கொடுக்க முடியும் என நம்புகிறோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jan Dhan Yojana opens a new door for RuPay gateway

As Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY), the financial inclusion scheme launched by Prime Minister Narendra Modi late last month notches up impressive numbers and expects to meet its 7.5 crore accounts target well within 100 days, payment gateway RuPay is experiencing a boost in fortunes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more