டெல்லி: டாடா குழுமம், இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய விமான போக்குவரத்து நிறுவனத்தை துவங்கி, சில நாட்களில் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்நிலையில் இக்கூட்டணி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஜெட்லைட் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகளை தன் பக்கம் (விஸ்தாரா நிறுவனத்திற்கு) இழுத்து வருகிறது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூட்டணி நிறுவனத்திற்கு விஸ்தாரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜெட்லைட்
ஜெட்லைட் நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜரான தீபக் ஜோஷி அவர்களை விஸ்தாரா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் இணைத்துள்ளது இக்கூட்டணி.
இண்டிகோ
அதேபோல் இண்டிகோ நிறுவனத்தின் சீனியர் கமான்டர் அஷ்தோஷ் வர்மா விஸ்தாரா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய விமான போக்குவரத்து கழகத்தால் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரி ஆவார்.
சில மாதங்களில்
ஏர் ஆப்ரேட்டர் அனுமதிக்காக காத்துக்கிடக்கும் டாடா குழுமத்தின் விஸ்தாகரா நிறுவனம் அடுத்த மாதம் இறுதிக்குள் மூழு வீச்சில் செயல்பட உள்ளது இதனால் இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய புது விதமான விளம்பர உத்திகளை கையால திட்டமிட்டுள்ளது.
விஸ்தாரா
ஏர் இந்தியா நிறுவனமே டாடா குழுமத்திடம் சுருட்டப்பட்ட விமானங்களின் மூலம் உருவானது என ஒரு கதை உண்டு, இந்நிலையில் டாடா குழுமம் ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் உள்நாட்டு விமானச் சேவையிலும், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் இணைந்ததன் மூலம் பன்னாட்டு விமான போக்குவரத்தில் கால் தடம் பதித்துள்ளது.
உயர் அதிகாரிகள்
இந்த தனியார் கூட்டணி நிறுவனம் தலைமை மனித வள அதிகாரியாக சி.எஸ்.வரதராஜன், தலைமை செயல் அதிகாரியாக பீ தெய்க் யெய், தலைமை வர்த்தக அதிகாரியாக கெய்மிங் டோ, தலைமை நிதி அதிகாரியாக நியாத் மாரு ஆகியோரை நியமித்துள்ளது.
தலைமையகம்
இந்நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளது. முதலில் இந்நிறுவனம் ஒரேஒரு ஏர்பஸ் 320 விமானத்தை கொண்டு செயல்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இதை 5ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளது விஸ்தாரா.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications