மும்பை: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கான பிரத்தியேக சேமிப்பு வங்கிக் கணக்குகளை துவங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி பத்து வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்காளர்களின் பிற சேவைகளான காசோலை மற்றும் ஏடிஎம் பயண்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, முன்று மாதங்களுக்கு பிறகு எஸ்.பி.ஐ இச்சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
பெஹ்லி உதான்
எஸ்.பி.ஐ வங்கி 10 வயதிற்கு மேற்பட்டோருக்கு 2 வகையான சேவை அளிக்கிறது இதில் ஒன்று "பெஹ்லி உதான்" எனப்படும் இந்த சேமிப்புக் கணக்கு, பத்து வயதிற்கு மேற்பட்ட ஒரு மைனர் தெளிவாகக் கைஎழுத்திடுபவராக இருந்தால், தனிநபர் வங்கி கணக்கு வழங்கப்படும். இதை அந்த மைனர் மட்டும் தனியாளாக நிர்வகிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
பெஹ்லா கதம்
அதே வேளையில், இரண்டாவது சேவை "பெஹ்லா கதம்" என்பது 10 வயதிற்கு மேற்பட்ட மைனர் குழந்தைகளுக்கு அவருடைய பெற்றோர் அல்லது காப்பாளர் துணையுடன் வைத்துக்கொள்ளும் கணக்கு (Joint account)" என எஸ்.பி.ஐ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
டெபிட் கார்டு மற்றும் காசோலை
இத்திட்டத்திற்காக பிரத்தியேகமாக வங்கிக் கணக்குப் புத்தகமும் காசோலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பாவ்ர்களுக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஏடிஎம் / டெபிட் கார்டுகள் வழங்கப்படும்.
இதர சேவைகள்
இதன் மற்ற அம்சங்கள் வரையறைக்குட்பட்ட பில் செலுத்துவது, நிரந்தர வைப்பு துவங்குவது, தொடர் வைப்பு துவங்குவது போன்ற சேவைகளும் உள்ளடங்கும். மேலும் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய் மதிப்பிலான பரிவர்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.
மொபைல் வங்கி சேவை
இது மட்டுமின்றி, இந்த கணக்கு வைத்திருப்போருக்கு, பில் செலுத்துகை, டாப் அப் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட மொபைல் வங்கி சேவைககளையும் தருகிறது. ஒரு நாளைக்கு இதல் அதிகபட்ச மதிப்பு ரூபாய் 2000 ஆகும்.
அருந்ததி பட்டாச்சார்யா
இந்த திட்ட துவக்க விழாவில் பேசிய இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, குழந்தை பருவம் முதலே சேமிப்பு வழக்கங்களை கொண்டுவருதல், பணத்தை புத்திசாலித் தனமாகக் கையாளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு வாழ்வில் நல்ல முறையில் செலவு செய்தலைப் பற்றிய வழக்கங்களையும் வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications