35 அன்னிய முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்யும் அரவிந்த் மாயாராம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அன்னிய முதலீடுகளைக் கவர்வதில் அரசு ஆர்வம் காட்டிவரும் நிலையில் பாரதி ஷிப்யார்ட் மற்றும் வெரிசோன் உள்ளிட்ட சுமார் 35 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் இம்மாத இறுதிக்குள் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

 

நிதிச் செயலாளர் அரவிந்த் மாயாராம் தலைமையில் இயங்கும் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (FIPB) 210 ஆவது கூட்டம் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் 35 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

பாரதி ஷிப்யார்ட் நிறுவனம்

பாரதி ஷிப்யார்ட் நிறுவனம்

இந்தியாவைச் சேர்ந்த பாரதி ஷிப்யார்ட் நிறுவனம் ஏற்கனவே அன்னிய அமைப்புசார் முதலீடுகளையும் (FII) வெளிநாடு வாழ இந்தியர்களின் (NRI)முதலீடுகளையும் கொண்டுள்ளதுடன், தற்போது பாதுகாப்புத் துறையில் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

முதலீட்டுக்கு மறுப்பு

முதலீட்டுக்கு மறுப்பு

எப்ஐபிபி இதற்கு முன் கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் மூதலீட்டு திட்டத்திற்கான ஒப்புதல் மீதான முடிவை ஒத்திவைத்தது குறிப்பிடதக்கது.

வெரிசோன் கம்யூனிகேஷன்

வெரிசோன் கம்யூனிகேஷன்

வெரிசோன் கம்யூனிகேஷன் இந்திய வெளிநாட்டு பொது முதலீடுகளை 74 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டி திட்ட விண்ணப்பத்தை அளித்துள்ளது. எப்ஐபிபி இந்த திட்ட விண்ணப்பத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடந்த கூட்டத்தின் போது தள்ளிவைத்தது.

இதர நிறுவனங்கள்
 

இதர நிறுவனங்கள்

மற்ற திட்ட விண்ணப்பங்களில் சிஸ்டமா ஷ்யாம் டேலிசர்விசெஸ், இண்டஸ் இந்த் பேங்க், ஹெச்.பி.எம் ப்ரைவேட் ஈக்விடி இந்தியா, ஹாட்சாப் ஹெலிகாப்டர் ட்ரைனிங், இன்ஸ்டன்ட் குளோபல் மணி ட்ரான்ஸ்பர் மற்றும் தாரா இந்தியா பண்ட் பார் ட்ரஸ்ட் ஆகியவை அடங்கும்.

தானியங்கி முறை

தானியங்கி முறை

இந்தியாவில் பெரும்பாலான துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு விண்ணப்பங்களை தானியங்கி முறைகள் மூலமாக கையாளும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கவனம் கொள்ள வேண்டிய பாதுகாப்பு, மருந்து மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட சில துறைகளில் முதலீட்டாளர்கள் எப் ஐ பி பி -இடம் முன் அனுமதி பெறவேண்டும்.

பாதுகாப்பு துறை

பாதுகாப்பு துறை

அரசு நாட்டில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல பாதுகாப்பு உபகரனங்களுகான உரிம விதிகளை தளர்த்தியுள்ளதுடன், முக்கியத்துவம் வாயிந்த பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.

ரயில்வே மற்றும் காப்பீட்டு துறை

ரயில்வே மற்றும் காப்பீட்டு துறை

ரயில்வே துறையும், அன்னிய முதலீடுகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதுடன், காப்பீட்டுத் துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance ministry to take up 35 FDI proposals

Finance ministry will take call on 35 foreign direct investment proposals, including that of Bharti Shipyard and Verizon Communications, later this month. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X