இகாமர்ஸ் சந்தையில் குதிக்கும் முன்னாள் மைக்ரோசாப்ட் ஊழியர்!!

கொல்கத்தா: பொதுவாக இந்தியர்களுக்கு நகைகள், தங்கம், வைரம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் இதில் மாற்றுப்பட்டு உள்ளனர். தங்கம் வேண்டாம் என்று இல்லை... டிசைனரி ஜூவல்லரி மீது ஆதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் குறிப்பாக இளைய தலைமுறையினர்.

மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் ஷாப்பிங்கிற்கு அதிகம் நாடி இருப்பது ஆன்லைன் சந்தையை தான். இந்த வகையில் இன்றைய இளைஞர்களையும், ஆன்லைன் சில்லறை விற்பனையும் நம்பி ஒரு மார்டன் ஜூவல்லரி தயாரிப்பு நிறுவனம் இகாமர்ஸ் சந்தையில் குதிக்க உள்ளது.

போர்செவன்(4 7)

போர்செவன்(4 7)

அமெரிக்காவின் எம்.ஐ.டி கல்லூரியில் பட்டம் பெற்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரேபேக்கா குமார் என்னும் ஒரு பெண் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் ஆன்லைன் மூலமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு டிசைனர் ஜூவல்லரி விற்பனையை தளத்தை துவங்கியுள்ளார். இந்நிறுவனத்திற்கு பெயர் போர்செவன்(4 7).

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

மேலும் இவர் தனது நிறுவனத்தின் விற்பனையை பெருக்க, இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கொண்ட பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் இணைந்துள்ளார். இதன் மூலம் இனி போர்செவன்(4 7) நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்த இரு நிறுவன வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

முதலீடும் வருவாயும்...

முதலீடும் வருவாயும்...

இந்நிறுவனத்தை இவர் வெறும் 50 இலட்ச ரூபாய் முகலீட்டில் துவங்கினார். தற்போது 200 கோடிக்கும் குறைவாக மதிப்பில் இந்நிறுவனம் வளர்ந்துள்ளது. எனவே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் அடுத்த 5 வருடங்களில் 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவிற்கு உயர முடியும் என நம்புவதாக ரேபேக்கா குமார் தெரவித்தார்.

டிசைனர் ஜூவல்லரி

டிசைனர் ஜூவல்லரி

இந்தியாவின் நகை சந்தை கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக வளர்ந்து இருந்தாலும், டிசைனர் ஜூவல்லரி சந்தையின் மதிப்பு வெறும் 8,000 கோடி ரூபாய் தான், ஆதிலும் ஆன்லைன் விற்பனை 1,800 கோடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இச்சந்தை 2015ஆம் ஆண்டின் இறுதியில் 4,200 கோடி ரூபாய் என்ற அளவில் உயரும்.

வளர்ச்சி

வளர்ச்சி

கடந்த ஒரு வருடத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக டிசைனர் ஜூவல்லரி சந்தை வெறும் 25-30 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என ரேபேக்கா தெரிவித்தார்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

மேலும் போர்செவன் நிறுவனம் தனது விற்பனை கிளைகளை விரிவுப்படுத்தவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

14 கேரட்

14 கேரட்

மேலும் 14 கேரட் டிசைனர் ஜூவல்லரிகள் இந்திய சந்தைக்கு கடுமையான சவாலும், ஆபத்தாவும் உருவாகி வருகிறது என இந்திய இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரீஸ் சோனி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+