விழாக் காலங்களில் ஆஃபர், தள்ளுபடி என களைகட்டும் சில துறைகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பண்டிகை காலங்களுக்கு முன்பாகவே வங்கிகள், வீட்டுச்சாதன தயாரிப்பாளர்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் பல சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அறிவிக்கத் துவங்கிவிடுவர். அதனால் பண்டிக்கை காலங்களில் புதிய பொருட்கள் மற்றும் புதிய சொத்துகள் சேர்பது வழக்கமாகிவிட்டது.

இந்த சலுகைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குமுன் அதைபற்றி நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது குறித்து ரிடிப்.காம் தயாரித்துள்ள விழாக்கால சலுகைகள் எந்த துறைகளில் எல்லாம் கிடைக்கும் என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கிறது. வாருங்கள் பார்க்கலாம்.

(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)

முதலில் வங்கிகள்

முதலில் வங்கிகள்

இப்பண்டிகை காலத்தில் முதன் முதலில் ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பின் அடிப்படையில் டெபிட் கார்டு மூலமாக அவர்கள் மொத்தமாகப் பொருட்களை வாங்கவும் அதை தவணையில் செலுத்தவும் கூடிய ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 10.25% சதவிகித நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடனையும் தருகிறது. மேலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோருகான சலுகைகள் உட்பட பல சலுகைகளை இந்த வங்கி வழங்குகிறது.

அரசு வங்கிகள்

அரசு வங்கிகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பெடரல் வங்கி சிறு கடன்களுக்கான வட்டி விகிதங்களில் சில சலுகைகள் வழங்குகின்றன. எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் தங்கள் விழாக்கால சலுகைகளை முடிவுசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

வீட்டு உபயோகப் பொருள்

வீட்டு உபயோகப் பொருள்

நீடித்து உழைக்கும் கனரக வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்சாதன நிறுவனங்கள் விழாக்காலத்தில் அதிரடி சலுகை, அட்டகாசமான சலுகை எல்லா அள்ளி வீசுவார்கள். வீடியோகான் புதிதாக 4கே அல்ட்ரா-ஹை டெபனிஷன் எல்.இ.டி ஸ்மார்ட் டீவிகளை அறிமுகப்படுத்துவதொடு 40 முதல் 80 இன்ச் வரையிலான ஐந்து புதிய மாடல்களை சுமார் 91000 ரூபாய் தொடக்கவிலையில் கொண்டுவந்துள்ளது. மேலும் சாம்சங், எல்ஜி மற்றும் சோனி நிறுவனங்கள் விரைவில் தங்களுடைய புதிய சாதனங்களை அறிவிக்க உள்ளன.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

கடந்த சில வருடங்களாக, வீட்டு வசதித் துறை விற்பனை குறைவு மற்றும் அதிக இருப்பு காரணமாக மந்த நிலையையும் நெருக்கடியையும் சந்தித்து வந்தது. தற்போது இந்தத் துறை சொத்துத் தரகர்களின் மூலமாக விலைகள் 7 முதல் 15 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று சுறுசுறுப்படைந்துள்ளது.

 புதிய புத்துணர்ச்சி

புதிய புத்துணர்ச்சி

"நிலையான புதிய அரசின் பின்னணியிலும் சாதகமான முடிவெடுப்பதில் காட்டப்படும் மும்முரத்தினாலும், வீட்டுவசதித்துறை விற்பனையிலும் புதிய திட்டங்களிலும் ஒரு சாதகமான சூழ்நிலையை அடைந்து வருகிறது" என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மாஜிக்ப்ரிக்ஸ்.காம்

மாஜிக்ப்ரிக்ஸ்.காம்

ரியல் எஸ்டேட் இணைய தளமான மாஜிக்ப்ரிக்ஸ்.காம் கூற்றுப்படி, சுமார் 250 பெரிய அளவிலான சொத்துப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் பெரு நகரங்களில் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ரூ.15 லட்சம் வரை தள்ளுபடி

ரூ.15 லட்சம் வரை தள்ளுபடி

இந்தியாப்ராபர்டி.காம் இணையதளத்தில் அதிரடியாக ரூ.15 லட்சம் வரை தள்ளுபடியும் இன்னும் பிற இலவசங்களும் வீட்டை வாங்குவோருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச சுற்றுலா, தங்கக் கூப்பன்கள், நாணயங்கள், நவீன சமயலறைகலன்கள், வீட்டு அறைகலன்கள் ஆகியவை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் அளவிற்கு தரப்படுவதுடன், இலவசப் பத்திரப்பதிவு ஆகியவையும் இந்த வீட்டுவசதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

ஜவுளித்துறை

ஜவுளித்துறை

இந்தியா அதிகப்படியான ஏற்றுமதி வருவாய் பெற்றும் வரும் துறைகளுள் ஜவுளித்துறையும் ஒன்று. இவ்விழாகாலங்களில் அதிரடியான சலுகைகள் அள்ளி விசும் துறைகளுள் இதுவும் ஒன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Festival Season Brings More Discounts to These Sectors

The most prominent thing that we adore the most about festivals is that they are full of surprises. Ahead of festive seasons, white goods companies, banks, real estate sectors roll out on special offers to woo customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X