"கான்டெக்ட் லெஸ் டெபிட் கார்டு" ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய முயற்சி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி பின் நம்பர் தேவைப்படாத கான்டெக்ட் லெஸ் டெபிட் கார்டுகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான ஒப்புதலையும் ரிசர்வ் வங்கியிடிம் கோரியுள்ளது.

 

தற்போது எந்த ஒரு கார்டையும் வாடிக்கையாளர் உபயோகிக்கும்போது அதற்கான ரகசிய (பின்) எண்ணை உபயோகிக்க வேண்டும். மெட்ரோ ரயில் அல்லது பஸ் பயணச்சீட்டு போன்ற சில சிறிய அளவிலான செலவுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவே இத்திட்டம்.

"பாதுகாப்பு பெரிதும் இல்லாமல் இருக்கும் இத்தகைய பண அட்டை பரிமாற்றத்திற்கு அதிகப்படியாக ரூ.2,000 மட்டுமே பண பரிமாற்றம் செய்யப்படும்" என எஸ்பிஐ வங்கியின் வர்த்தக யுக்திகள் மற்றும் புதிய வணிகத் துறையின் துணை மேலாண்மை இயக்குனர் எஸ் கே மிஷ்ரா ஒரு பன்னாட்டு செலாவனி மற்றும் பயண க்ரெடிட் கார்டினை அறிமுகப்படுத்தும் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தால், எதிர்காலத்தில் வரும் அனைத்து டெபிட் கார்டுகளும் இது போன்று தொடர்பற்ற அல்லது அண்மைத் தொடர்பு வசதியுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த வங்கி தற்போது இதுபோன்ற புதிய ரக டெபிட் கார்டுகளை சென்னை மற்றும் மும்பை மெட்ரோ நிலையங்களில் சோதனை முறையில் உபயோகித்துவருகிறது. எஸ்பிஐ-யும் மாஸ்டர் கார்டும் இணைந்து இன்று புதிய பன்னாட்டு செலாவணி மற்றும் பயணக் க்ரெடிட் கார்டை அறிமுகப்படுத்தின. இது டாலர், பவுண்ட், யூரோ மற்றும் சிங்கபூர் டாலர் ஆகிய செலாவணிகளில் கிடைக்கும்.

இதைப் பெற ஒரு வாடிக்கையாளர் நூறு ரூபாய் கட்டணமாகச் செலுத்தி மேலும் அதை குறைந்தபட்சம் இருநூறு அமெரிக்க டாலர் மதிப்பு வரை சேமித்துக்கொள்ளலாம்.

எஸ்பிஐ தற்போது மும்பை, சென்னை, டெல்லி மற்றும் பெங்களுரூவில் சுமார் நூறு கிளைகளுக்கு இந்த கார்டினை விற்க அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த பன்னாட்டு செலாவனி கார்டில் மேலும் கனடா டாலர், ஆஸ்திரேலிய டாலர், ஜப்பானிய யென் மற்றும் சவுதி ரியால் ஆகிய நாணயங்களையும் இந்த வங்கி சேர்க்கவுள்ளதாக மிஷ்ரா தெரிவித்தார். இந்த கார்டுகளையும் தொடர்பற்ற முறையில் மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No more PINs! SBI seeks RBI nod to launch ‘contact-less' debit cards

The country's largest lender State Bank of India today said it is planning to launch contact-less debit cards which would enable customers to carry out some transactions without entering the pin number.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X