பெங்களுரூ, காந்திநகர் அடுத்து ஹைதராபாதில் ஃப்ரீ "வை-பை"!! ஆனா இது "வொயிட்-பை"..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிந்து சென்ற தெலுங்கானா கடந்த சில மாதங்களாக பல முன்னேற்ற திட்டங்களை அம்மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா மாநிலத்தின் பெங்களுரூ, குஜராத் மாநிலத்தின் காந்திநகர் போன்ற நகரங்களில் இருப்பது போல் ஹைதராபாதிலும் இலவச வை-பை வசதியை அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

ஆனால் இதை வை-பை என்று சொல்ல முடியாது, அது ஒரு வொயிட்-பை. அது என்னடா வொயிட்-பை??? அது ஒரு லேட்டஸ்ட் டெக்னாலஜி பாஸ்...

வொயிட்-பை

வொயிட்-பை

தொலைகாட்சி நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைகதிர்களில், பயன்படுத்தப்படாத அலைகதிர்களை பயன்படுத்தி இண்டர்நெட் சேவை அளிக்கப் பயன்படுத்துவது தான் வொயிட்-பை டெல்னாலஜி. இதன் மூலம் ஸ்பெக்ட்ரத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும். மேலும் அது இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இதுவரை பயன்படுத்தியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

தாராக்க ராமாராவ்

தாராக்க ராமாராவ்

மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானவில், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இம்மாநிலத்தில் முக்கிய நகரமான ஹைதராபாத்தில் இலவச வை-பை சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், கூடிய விரைவில் வொயிட்-பை தொழிற்நுட்பத்தையும் இணைப்போம் எனவும் இம்மாநில தொலைதொடர்பு அமைச்சர் தாராக்க ராமாராவ் தெரிவித்தார்.

தொலைதொடர்பு நிறுவனங்கள்

தொலைதொடர்பு நிறுவனங்கள்

மேலும் அவர்,"ஹைதராபாத்தில் இலவச வை-பை சேவை அளிக்க தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், இதற்கான ஒப்பந்தங்களை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்." என்று அவர் கூறினார்.

ஆராய்ச்சி
 

ஆராய்ச்சி

மென்பொருள் உலகில் முன்னணி நிறுவனங்களான கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனகள் வொயிட்-பை டெக்னாலஜியை பயன்படுத்தி சிறப்பான இண்டர்நெட் சேவை எப்படி அளிப்பது என ஆராய்ச்சி செய்து வருகிறது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்புதிய தொழிற்நுட்பத்தை ஆப்பிரிக்காவில் சோதனை ஒட்டமாக செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telangana to bring in ‘White-Fi’ to make Hyderabad a Wi-Fi city

The Telangana Government, which is trying to make Hyderabad a Wi-Fi enabled city, is in the process of acquiring ‘White-Fi’ technology, a new technology that intelligently uses all the unused spectrum allotted for broadcasting of television signals.
Story first published: Thursday, September 11, 2014, 12:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X