டெல்லி: பல காலாண்டுகளாக இந்திய ரயில்வே துறை மிகவும் குறைவான வருவாய் மட்டுமே ஈட்டி வந்தது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சில் காலாண்டகளில் நஷ்டத்தை சந்தித்துள்ளது இந்திய ரயில்வே துறை. இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு சதானந்த கவுடா தலைமையிலான ரயில்வே துறையின் வருவாய் சுமார் 12 சதவீத உயர்வை பெற்றது.
கடந்த மே மாத இறுதியில் சதானந்த கவுடா மத்திய ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்றார். இதன் பின் ரயில்வே துறையில் பல மாற்றங்களை செய்தார். அதில் முக்கியமான ஒன்று இத்துறையில் அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை உயர்த்தியது.
வருவாய் உயர்வு
இந்திய ரயில்வே துறை ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டங்களில் 61,324.64 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 54,496.73 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டி இருந்தது, இது சுமார் 12 சதவீதம் அதிகமாகும்.
பயணிகள் வருவாய்
இதே காலகட்டதில் இத்துறையில் பயணிகள் முலம் கிடைக்கும் வருவாய் 14,758.01ஆக மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது 17,700.16 கோடியாக உள்ளது. இந்த உயர்வு ரயில் கட்டணங்களை உயர்த்தியதன் மூலமாகவும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பெற்றது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பதிவு பயணிகள்
ரயில்வே துறையின் ஆன்லைன் டிக்கெட் பதிவு தளத்தை மேம்படுத்திய சதானந்த கவுடா, இக்காலகட்டத்தில் பதவி பயணிகளின் எண்ணிக்கை 3,508.68 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு
மேலும் இத்துறை அன்னிய முதலீட்டுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது, அடுத்த 10 வருடங்களின் இத்துறையின் வளர்ச்சி நாட்டின் கருவூலத்திற்கு மிகப்பெரிய சொத்தாக விளங்கும்.
ஜப்பான் சந்திப்பு
சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிவிரைவு ரயில்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜாப்பான் அதிபர் ஷின்சோ அபே-விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


Click it and Unblock the Notifications