இந்த இன்சூரன்ஸ் பாலிஸி எல்லாம் தேவை இல்ல பாஸ்!!

சென்னை: இன்றைய நாட்களில் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் இன்சூரன்ஸ் பாலிஸிகள் சந்தைகளில் கிடைத்தாலும், நமக்கு உண்மையிலேயே தேவையானவற்றை விரல் விட்டு எண்ணி விட முடியும். ஆனால் எது தேவையில்லாதது, எது நமக்கு பலனை அளிக்காது என கண்டுப்பிடிப்பது தான் கடினம்.

நீங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை நடத்தி, உங்களுடைய சொத்துக்கள், வருமானம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மற்றும் உங்களுடைய மறைவுக்குப் பின்னர் விருப்பத்திற்குரிய வரை பாதுகாத்துக் கொள்ளவும் தான் இத்தகைய இன்சூரன்ஸ்களில் முதலீடு செய்கிறோம்.

அந்த வகையில் இங்கே உங்களுக்கு மிகவும் அவசியமாக கருதப்படும் 3 இன்சூரன்ஸ் பாலிஸிகள், மற்றும் அவசியமற்ற 3 இன்சூரன்ஸ் பாலிஸிகளை பற்றி பார்போம்.

ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீடு

உங்களுக்குத் திருமாணமாகி, குழந்தைகள் இருக்கும் போதும் எடுக்க வேண்டிய மிகவும் அவசியமான இன்சூரன்ஸ் பாலிஸியாக இது உள்ளது. குடும்பத்தின் நிதி சமநிலையை கவனித்து வரும் உங்களுடைய வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். நீங்கள் இல்லாது போனால் ஏற்படும் வருமான இழப்பு உங்கள் மனைவியும், குழந்தைகளையும் சிக்கல்களில் மாட்டி விட்டு விடும்.

சொத்து காப்பீடு

சொத்து காப்பீடு

சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் கையில் பணமிருந்தால் இந்த வகை பாலிஸகளை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. நீங்கள் வங்கியில் கடன் வாங்கி, வீட்டை வாங்கியிருந்தால், அந்த வீட்டுக்கு காப்பீடு செய்யுமாறு அவர்கள் உங்களை அறிவுறுத்துவார்கள். பலருக்கும் மிகவும் அத்தியாவசியமான சொத்தாக இருக்கும், வீட்டை முடிந்த வரையிலும் பாதுகாப்பதற்கு இந்த சொத்து காப்பீடு உதவும்.

வாகன காப்பீடு

வாகன காப்பீடு

உங்களுக்குத் தேவையான காப்பீடுகளில் வாகன காப்பீடும் ஒன்று. வாகன காப்பீடு செய்வது பல மாநிலங்களில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் வாகனம் ஓட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாகன உதிரிபாகங்களை மாற்றுவதற்கு உதவுவது தான், வாகன காப்பீடு செய்வதற்கான மிகவும் பொதுவான காரணமாக உள்ளது. வீட்டைப் போலவே, வாகனங்களும் மிகவும் விலையுயர்ந்தவையாக இருப்பதால், அவற்றை சேதங்களிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் சரி செய்யவும் வாகன காப்பீடு செய்வது அவசியம்.

பெரும்பாலான வாகன காப்பீட்டு திட்டங்களில் வேறொரு மனிதருக்கு அடிபட்டாலோ அல்லது மரணம் சம்பவித்தாலோ அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

 

போக்குவரத்து மற்றும் விமான பயண காப்பீடு

போக்குவரத்து மற்றும் விமான பயண காப்பீடு

நீங்கள் ஏற்கனவே செய்திருக்கும் காப்பீடுகளுடன் சேர்ந்து, ஒரு பிரீமியம் கட்டுவதன் மூலமாக இந்த பாலிஸிகளின் பலன்களைப் பெற்றிட முடியும். முதலில், நடைமுறையில் இருக்கும் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு பாலிஸிகளைப் பார்த்து, பயணங்களின் போது அல்லது விமான பயணங்களின் போது அவை எந்த வகையில் நம்மை காப்பீடு அளிக்கின்றன என்று கவனியுங்கள். எப்படிப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வகையில் இன்சூரன்ஸ் காப்பீடு கிடைக்கும். அதனால் போக்குவரத்திற்காக தனியாக ஒரு காப்பீடு எடுக்க வேண்டாம்.

குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீடு

குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீடு

பொதுவாகவே, குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு செய்வது பணத்தை விரயம் செய்யும் செயலாகும். பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்து, நீண்ட நாட்களுக்கு வாழ்வார்கள் என்பதால் தான் இந்த பாலிஸிகள் தேவையற்றவை என்று கருதப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு வருமானம் என்று ஒன்று கிடையாதாகையால், அவர்களுக்கு காப்பீடு செய்யத் தேவையில்லை.

நீங்கள் குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு போடாததால், அவர்களை நீங்கள் விரும்பவில்லை என்று அர்த்தமில்லை.

 

 

முழு வாழ்க்கைக்குமான காப்பீடு

முழு வாழ்க்கைக்குமான காப்பீடு

காப்பீடு என்பது ஒரு கருவி, முதலீடல்ல. முழு வாழ்க்கைக்கும் காப்பீடு செய்தால், நீங்கள் அதிகமான பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இந்த வகை காப்பீட்டுத் திட்டங்கள் மிகவும் செலவு பிடிக்கக் கூடியவை என்பது தான் பிரச்னையாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+