ஜம்மு காஷ்மீரில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம்!!

டெல்லி: இந்தியாவின் மேற்கு முனை மாநிலமான ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு கோரமான வெள்ளம் தாக்கியுள்ளது, இதனால் இப்பகுதியில் வர்த்தகம், விடுதிகள், உணவகங்கள், தோட்டக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகிய வருவாய் ஈட்டித்தரும் எல்லா துறைகளும் முடங்கியுள்ளது. இதன் மூலம் இம்மாநில அரசுக்கும் சுமார் 5,400- 5,700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அசோச்சாம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இப்போது மின்சாரம், ரயில்வே மற்றும் தொலைதொடர்பு சேவைகள் முடங்கியுள்ளது. இதனால் மக்களை தொடர்புகொள்ளவும், ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும் ரானுவத்தினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நஷ்டம்...

நஷ்டம்...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் விடுதிகள், வர்த்தகம், விவசாயம், தோட்டக்கலை, சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததில் சுமார் 2,630 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. அதேபோல் முக்கிய சொத்துக்களான ரயில்வே, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவையும் சேதமானதால் 3000 கோடி ரூபாய் அளவு இம்மாநிலாம் நஷ்டம் அடைந்துள்ளது.

மீண்டு வர அதிக காலம் தேவை...

மீண்டு வர அதிக காலம் தேவை...

இம்மாநிலம் வெளியிட்டுள்ள நஷ்ட புள்ளிவிபரங்கள் அனைத்து கணிப்பு என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் மாநிலம் பழைய நிலைமைக்கு திரும்ப அதிகப்படியான காலம் தேவை எனவும் இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

கடந்த வருடம் நாட்டின் மிகப்பெரிய வெள்ளம் தாக்குதலை சந்தித்த உத்தரகண்ட், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மேலும் காஷ்மீர் ஒரு சுற்றுலா தளம் என்பதால பயணிகளை கவர விரைவாக செயல்பட வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநில வருவாய்

மாநில வருவாய்

இம்மாநில் 2013-14ஆம் நிதியாண்டில் சுமார் 45,399 கோடி ரூபாய் வருவாய் பெற்றது. இதில் 20 சதவீத வருவாய் விவசாயத்தில் இருந்து, 23.5 சதவீத வருவாய் சுரங்கம் மற்றும் நிறுவனங்கள் அளிக்கிறது. மீதமுள்ள 56.5 சதவீத வருவாய் சேவைத்துறையில் இருந்து இம்மாநிலம் பெறுகிறது.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

வருடத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான பயணிகளை கவரும் இம்மாநிலம் தற்போது கலை இழந்துள்ளது.

நிதியுதவி

நிதியுதவி

மேலும் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக சுமார் 1000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல ஆயிரம் ராணுவ அதிகாரிகள் மீட்டுப்பு பணிகளில் ஈடுப்பட்டு உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+