தனியார் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பாதுகாப்பு துறை!! ரூ.25,000 கோடி ஒப்பந்தம்

டெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான போர் கப்பல்களை தயாரிக்கும் 25,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அரசு நிறுவனங்களுக்கும் கொடுக்க முடியாது, தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இப்புதிய போர் கப்பல்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும்.

இத்திட்டத்தை கைப்பற்ற கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் பாதுகாப்பு துறைக்கு ஒப்பந்த அறிக்கை அனுப்பியது. பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தது.

தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை..

தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை..

பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்கு ரூ.25,000 கோடி மதிப்பில் 4 விமான தாங்கி போர் கப்பல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதை இந்தியாவில் பொது துறை நிறுவனங்கள் அல்லாமல் தனியார் நிறுவனமான பிப்பாவ், ஏபிஜி, எல் அண்டு டி மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமே அளிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏன் இப்படி..

ஏன் இப்படி..

அரசு நிறுவனங்களின் மேல் மத்திய அரசிற்கு அவ்வளவு நம்பிக்கை. பொதுவாக இந்தியா தயாரிப்புகளுக்கு சிறந்த மதிப்பு இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நம் நாட்டிலும் சரி பிற நாடுகளிலும் சரி மதிப்பு மிகவும் குறை. இதற்கு முக்கிய காரணம் குறைவான தரம் மற்றும் எளிமையற்ற டிசைன்.

உதாரணம்

உதாரணம்

மின்உற்பத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தாலும், உற்பத்தி ஏனோ குறைவு தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் அப்படி இல்லை பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை ஒப்பிடுகையில் குறைவாக இருந்தாலும் உற்பத்தி இணையாக இருக்கும்.

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட்

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட்

புதிய திட்டத்தில் கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தை ஒரம்கட்டிய பாதுகாப்பு துறை அமைச்சகம் தற்போது 40,000 டன் விமான தாங்கி கப்பலை உருவாக்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் இந்த ஒரு திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மட்டும் போதுமானது என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது.

விமான தயாரிப்பிலும் தனியார் தான்

விமான தயாரிப்பிலும் தனியார் தான்

கப்பல் கட்டுமானத்தை போலவே 56 போக்குவரத்தி விமானங்களை உருவாக்கும் பணியில் தனியார் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனங்களை ஒதுக்கியுள்ளது. இதன் மதிப்பு மட்டும் 15,000 கோடி ரூபாயாகும்.

ஊழல்

ஊழல்

மேலும் சில வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்திற்கு இறக்குமதி மற்றும் தயாரிப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்தது குறிப்பிடதக்கது. இதனால் மோடி தனது ஆட்சியில் அது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டாம் என்றும், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளார்.

ஆயத ஏற்றுமதி

ஆயத ஏற்றுமதி

மேலும் தனியார் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு அதிகப்படியான வருமான கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் உற்பத்தி குறைவான நேர்த்தில் அதிகரிக்கப்படும். இது பொதுத்துறை நிறுவனங்களை அமைதியாக வலிமைபடுத்துவதற்கான காலம் என்ற எடுத்துக்கொள்ள வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+