மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வைப்பு நிதிக்கான வட்டி வகிதத்தை உயர்த்தியுள்ளது.
இவ்வங்கியின் 180-210 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது, இதேவேளையில் 1 முதல் 3 வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக குறைத்துள்ளது.

இதர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய மக்கள் தற்போது குறைந்த கால முதலீட்டையே அதிகளவில் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார். அதனால் எல்ஐசி நிறுவனமும் அதிகப்படியான குறிகிய கால திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா குறைந்த கால வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தியும், நீண்ட கால வைப்பு நிதிக்கு வட்டியை குறைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் ஆர்வமுடன் பணத்தை வைப்பு நிதியில் முதலீடு செய்வார்கள் என இவ்வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications