100 பில்லியனர்களை கொண்ட இந்தியாவிற்கு 6வது இடம்!! அமெரிக்காவிற்கு முதல் இடம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா, இந்த வருடம் தனது 6ஆம் இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 175 பில்லியன் டாலராகும். மேலும் உலகளவில் பணக்காரர்களின் (பில்லியனர்கள்) எண்ணிக்கை 2,325 ஆக உயர்ந்துள்ளது.

 

வெல்த் எக்ஸ் மற்றும் யுபிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து பில்லியனர் சென்செக்ஸ் 2014 என்ற அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. இதில் இந்தியா 2013ஆம் ஆண்டில் 103 பில்லியனர்களை கொண்டதாகவும், தற்போது அது 100ஆக குறைந்நதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

முதல் இடத்தில் அமெரிக்கா..

முதல் இடத்தில் அமெரிக்கா..

காசு, வல்லரசு, பெட்ரோல், போர், என்ற வார்த்தை வந்தாலே அங்கு அமெரிக்கா உள்ளது இந்த அளவிற்கு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது, அதை தொடர்ந்து சீனா, பிரட்டன் ஆகிய நாடுகள் உள்ளது.

இந்தியாவிற்கு பின்னால்..

இந்தியாவிற்கு பின்னால்..

இப்பட்டியலில் இந்தியாவிற்கு பின்னால் சுவிச்சர்லாந்து, ஹாங்காங் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இதே வெல்த் எக்ஸ் நிறுவனம் சிறந்த பொருளாதார நாடாக சுவிச்சர்லாந்தை அறிவித்தது.

எண்ணிக்கை குறைந்தது..

எண்ணிக்கை குறைந்தது..

மேலும் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது பில்லியனர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளதாக வெல்த் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் மொத்த எண்ணிக்கை 2,325 ஆகும், இதில் 177 பேர் புதியதாக இப்பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது.

சொத்து மதிப்பு
 

சொத்து மதிப்பு

மேலும் 2,325 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 7.3 டிரில்லியன் டாலர் ஆகும். ஐரோப்பாவில் மட்டும் 775 பில்லியனர்கள் இவர்களின் சொத்து மதிப்பு 2.71 டிரில்லியன் டாலர் என்பது குறிப்படதக்கது.

அதை படிக்காதிங்க...

அதை படிக்காதிங்க...

இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India home to 100 billionaires; sixth in the top 10 league

India has retained its sixth position in terms of number of billionaires with 100 such people collectively having $175 billion in net worth, while globally the number of uber-rich has reached a record high of 2,325 persons.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X