டெல்லி: சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்கள் முன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு புதன்கிழமை வந்தார். இவரின் வருகையை எதிர்த்து டெல்லியில் சீன துதரகம் முன்பு திபெத் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் நேற்று இந்திய எல்லைக்குள் 1000 சீனர்கள் ஊடுருவியதாக தகவலும் கிடைத்துள்ளது. இத்தனை பிரச்சனைக்கும் மத்தியில் இன்று இரண்டாம் நாளாக மோடி மற்றும் ஜி ஜின்பிங் உடன் தலைநகர் டெல்லியில் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
மேலும் ஆசிய கண்டத்தில் மிகப்பெரும் பொருளாதார நாடான இந்தியா மற்றும் சீன தலைவர்களின் இச்சந்திப்பு உலக நாடுகளின் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த 3 நாள் சந்திப்பில் நடக்கும் முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க..
அதிவேக ரயில்
மத்திய அரசின் கனவு திட்டமான அதிவே ரயில், புல்லட் ரயில் மற்றும் மெட்ரோ ரியல் திட்டத்தில் முதலீடு செய்ய சீன அரசு திட்டுமிட்டுள்ளது. மேலும் இத்திட்டம் இந்தியாவின் 50 முக்கிய நகரங்களில் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத்தில் முதலீடு அதிகரிப்பு
இதுவரை இந்தியாவில் சீன முதலீட்டில் அதிகளவு குஜராத் மாநிலத்தில் தான் உள்ளது (400 மில்லியன் டாலர்). இந்நிலையில் றேற்று இந்தியா வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கு கடந்த 10 வருடத்தில் குஜராத் அடைந்த வளர்ச்சியை மோடி காண்பித்தார். மேலும் இம்மாநிலத்தில் முதலீட்டை அதிகரிக்க ஜின்பிங் ஒருமனதாக ஒப்புதல் அளித்தார்.
வர்த்தகம்
கடந்த நிதியாண்டில் இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் மட்டும் 66.4 பில்லியன் டாலர். இந்த வர்த்தகத்தில் அதிகம் பலனை பெற்றது சீனா தான். நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டுகளிலும் சீனா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ரயில்வே கட்டுமான
மேலும் இந்திய ரயில்வே துறை மேம்படுத்த சீனாவின் உதவியை இந்தியா நாடியுள்ளது.
வீடு கட்டுமானம்
இது மட்டும் அல்லாமல் மலிவு விலை வீடுகளை கட்டுவதில் சீனா தற்போது சிறந்து விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மலிவு விலை விடுகளை கட்ட சீனாவிடம் பாடம் கற்றக திட்டமிட்டுள்ளது, இதற்கான ஒத்துழைப்பும் நாடியுள்ளது.
முதலீடு
சீனாவின் எலக்ட்ரானிக் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் டெக் பார்க்குகளை அமைக்க முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர், இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கையெழுத்திட உள்ளது.
கல்வி
குஜராத்தின் பல பல்கலைகழகங்கள் சீன கல்வி நிறுவனங்களுடன் இணைக்க உள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் சில கல்லூரிகளும் சீன கல்வி நிறுவனங்களுடன் இணைக்க தயாராக உள்ளது. இந்த இணைப்பின் மூலம் அறிவு பறிமாற்றம் இரு நாடுகளுக்கிடையே உருவாகும்.
கலாச்சார பறிமாற்றம்
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பறிமாற்றத்திற்கு தனி தளம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
100 பில்லியன் டாலர் முதலீடு
இந்தியா ஜாப்பான் நாடுகளுடன் நட்புறவை நாடி வருவதால், இதை கண்டு வெகுண்டு வரும் சீன இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு வரை முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications