சியாட்டில்: உலகில் வன்பொருள் மற்றும் மென்பொருள் என்ற இரண்டையுமே சிறப்பாக உருவாக்கும் நிறுவனங்கள் சில மட்டுமே, அதில் சில ஆப்பிள், ஐபிஎம், ஆரக்கிள் போன்றவை. இதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஆரக்கிள். இந்நிறுவனம் எண்டர்பிரைஸ் மென்பொருள் உருவாக்குவதில் தலைசிறந்தது. மேலும் ஆரக்கிள் இந்தியா மட்டும் அல்லாமல் பல உலக நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் சீஇஓ-வான லேரி எலிசன் சீஇஓ பதவியில் இருந்து விலகுவதாக திடீரென் அறிவித்துள்ளார். மேலும் இவரது பணிகளை இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் பகிர்ந்து கொள்ளவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் சப்ரா காட்ஸ் மற்றும் மார்க் ஹர்ட் ஆகிய இருவரும் இனிஇணை தலைமை செயல் அதிகாரிகளாக லேரி எலிசன் நியமித்துள்ளார். மேலும் நிறுவன பொருப்புகளை பகிர்ந்துக்கொள்ள இவர்கள் உயர் மட்ட அதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். சீஇஓ பதவியில் இருந்து விலகிய லேரி, நிர்வாக குழுவிலும், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாக பொருப்பேற்றக உள்ளார். இந்நிறுவன கடந்த சில காலாண்டுகளாக வர்த்தகத்தில் பின்தங்கி வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்புகளில் அதிகப்படியாக கவனத்தை செலுத்தவே இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நொடிகளில் பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2 சதவீதம் சரிந்தது 40.70 டாலராக குறைந்துள்ளது. இந்நிறுவனம் 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முதல் இவர் ஒருவர் இந்நிறுவனத்தின் சீஇஓவாக இருந்துள்ளார். இதனால் இந்நிறுவனத்தின் புதிய இணை சீஇஓ அவர்களுக்கு கூடுதல் பொருப்பும், மதிப்பும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஜாவா மென்பொருளை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை, லேரி எலிசன் தலைமையிலான ஆரக்கிள் நிறுவனம் சுமார் 7.45 பில்லியன் டாலருக்கும் கைபற்றியது. இதனால் அமெரிக்க மென்பொருள் வர்த்தக சந்தையில் இவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இவருக்கு வயது 70, 5 மனைவிகள் மற்றும் 2 மகன்கள் (டேவிட் எலிசன் மற்றும் மேகன் எலிசன்). இவருடைய சொத்து மதிப்பு 49.7 பில்லியன் டாலர். ஆண்டு வருமானம் 77 மில்லியன் டாலர்.
இரு தலைவர்கள்
லேரி எலிசன்
பங்கு சந்தையில் ஆரக்கிள்
ஓரே தலைவர்
விமர்சனம்
சொந்த வாழ்க்கை


Click it and Unblock the Notifications