டெல்லி: வளர்ச்சியின் வேகம் குறைவாக இருந்தாலும் வளரும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியாவை பட்டியலிட்டுள்ளார்கள். ஆனால், கடந்த பத்தாண்டுகளின் நிதிச்சிக்கல்களை இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அனுபவித்து வருகின்றன என்பது நிதர்சன உண்மை. இந்த நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
அரசியல் சூழல்களாலும், நிதி நிலைகளாலுமே இந்த மோசமான சரிவு நிலை ஏற்பட்டதற்கு காரணங்களாகும். மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனத்தின் தரநிலைப்படி, 10 நாடுகள் திவாலாகும் நிலையில் உள்ளன என்ற தகவலை USA Today பத்திரிக்கை தொகுத்துள்ளது.
ஈகுவடார்
ஈகுவடார், தென் அமெரிக்காவில் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜனநாயக குடியரசு நாடாகும். 2014-ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.8 சதவீததத்தை இந்த நாடு செலுத்த வேண்டியுள்ளது.
எனினும், இந்நாட்டின் 2001-ம் ஆண்டின் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமாக இருந்த வறுமை நிலை 2011-ம் ஆண்டில் 17.4 சதவீதமாக குறைந்துள்ளது.
எகிப்து
உலகில் பழமையான நாகரிக நாடுகளில் ஒன்றான எகிப்து நாடு தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 91.3 சதவீதத்தை கடனாக செலுத்த வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியான செய்தியாகும். ஆனால், 2014-ம் ஆண்டில் எகிப்தின் மொத்த தேசிய உற்பத்தியில் தனிநபர் வருமானம் 6,696 டாலர்கள் மட்டுமே. இந்நாட்டின் பொருளாதாரத்தில் ஊழல் மலிந்திருப்பதே இந்த அவலநிலைக்கு காரணமாகும்.
பாகிஸ்தான்
180 மில்லியன் மக்களுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்டு, 6-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. IMF நிறுவனத்திடமிருந்து பல பில்லியன் டாலர்களை கடன்களாக பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த கடன்கள் அமைப்பு ரீதியான மாற்றங்களை பொருளாதாரத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற விதியின் கீழ் தரப்பட்டவையாகும்.
2014-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3,231 டாலர்களாக இருந்த தனிநபர் வருமானத்தில் 63.7 சதவீதத்தை இந்நாடு கடனாக கொடுக்க வேண்டியுள்ளது. IMF நிறுவனம் கடன் தருவதாக ஏற்றுக் கொள்ளும் வரையில் கடன் செலுத்த முடியாத நாடுகளில் ஒன்றாகவே பாகிஸ்தான் இருந்தது. இந்நாட்டில் வரி வசூலிப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
வெனிசூலா
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசூலா நாடு, 2014-ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 13,531 டாலர்களாக மதிப்பிடப்பட்டிருந்த தனிநபர் வருமானத்தில் 51.6 சதவீதத்தை கடனாக செலுத்த வேண்டிய நிலையில் இந்நாடு உள்ளது.
இந்நாட்டின் அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மடூரோவின் முடிவுகளால், இந்நாட்டின் பத்திரங்களின் விலைகள் 2013-ம் ஆண்டில் பல்வேறு தடவைகள் வீழ்ச்சியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்கா
உருவத்தில் சிறிய ஜமைக்கா தன்னுடைய மொத்த தேசிய உற்பத்தியில் 133 சதவீத அளவிற்கு கடனில் மூழ்கியுள்ளது. குறைவான வளர்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிப்பு ஆகிய பிரச்னைகள் இரந்தாலும், முதலீட்டாளர்களின் உயர்வான நம்பிக்கைகளால் இந்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வர முயற்சி செய்து வருகிறது. இந்நாட்டினரின் மொத்த தேசிய உற்பத்தியில் தனிநபர் வருமானமாக 9,256 டாலர்கள் உள்ளது.
2014-ம் ஆண்டில் பன்னாட்டு பத்திர சந்தைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த ஜமைக்கா, அப்போது 800 மில்லியன் டாலர்களை பெற்றது. இது அந்நாட்டு அரசு அதிகாரிகளால் எதிர்பார்க்கப்பட்ட 500 டாலர்களை விட அதிகமாகும்.
அர்ஜென்டினா
தென்கிழக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு நாடாக அர்ஜென்டினா உள்ளது. ஆனால், இந்த நாட்டிலும் கூட சில கடன் பிரச்னைகள் உள்ளன. 2014-ம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியில் கடன் அளவாக மட்டும் 52.9 சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனிநபர் வருமானத்தின் அளவு 18,917 டாலர்களாக உள்ளது.
பல ஆண்டுகளாகவே மிகவும் அதிகமான பணவீக்கம் இருப்பது தான் இந்நாட்டின் முக்கியமான பலவீனமாகும். இதன் மூலம் இந்நாட்டின் பண மதிப்பும் குறைந்து வருகிறது.
கிரீஸ்
கிரீஸ் 11 மில்லியன் பேருக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட தெற்கு ஐரோப்பிய நாடாகும். இந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 174.7 சதவீதத்தை கடனுக்கு செலத்த வேண்டியுள்ளது என்பதை வைத்தே இந்நாட்டின் நிலையை சொல்லி விடலாம். இப்பொழுது கடன்களை மறுசீரமைக்கவும் மற்றும் பொருளாதார ஒழுங்கை கொண்டு வரவும் கிரீஸ் முயன்று வருகிறது.
சைப்ரஸ்
மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸ் நாடு 121.5 சதவீதம் கடனை செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆண்டில் IMF, ஐரோப்பிய மத்திய வங்கிகளிடமிருந்து 10 பில்லியன்களை கடனாக பெற்றுள்ளது சைப்ரஸ். இதன் மூலம் திவாலாவதில் இருந்து சைப்ரஸ் தப்பியுள்ளது.
கியூபா
கரீபியன் பகுதியில் உள்ள சிறு தீவான கியூபாவை கியூபா குடியரசு என்று அழைப்பார்கள். இந்த நாட்டின் அரசுக்கும் பெருத்த கடன் சுமை உள்ளது.
வெளியிலிருந்து கிடைக்கும் நிதி ஆதாரங்களை அடைவதற்கான கட்டுப்பாடுகள், மிகவும் அதிகமாக இறக்குமதியை சார்ந்திருத்தல், பொருளாதாரா மாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஒளிவு மறைவின்றி இல்லாமலிருத்தல் ஆகியவையே இந்நாட்டின் சரிவுக்கு காரணமாகும்.
உக்ரைன்
உக்ரைன் ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடாகும். இந்நாடு இரஷ்யாவிற்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக திரும்ப தர வேண்டியுள்ளது.
சோவியத் யூனியனை கலைத்த பின்னர், இந்த நாடு திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியது. இந்த மாற்றம் மிகவும் கடினமானதாகவும், மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உழலவும் நிலைக்கு வழிவகை செய்து. இந்நாட்டின் மக்களில் பெரும்பாலானவர்கள் கிராமப் பகுதிகளில் வசித்து வருவதால், தங்களுடைய உணவை தாங்களே உற்பத்தி செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications