டெல்லி: நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை மாலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், டெல்லி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இம்மாத துவக்கத்தில் அறுவை சிகிச்சைக்காவும், நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடதக்கது.
ஜி20 மாநாடு
இவரது உடல்நிலை பிரச்சனையின் காரணமாக அஸ்திரேலியாவில் நடந்த ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர் மாநாடுக்கு கூட நிதியமைச்சரால் போக முடியவில்லை.
வருமான வரிக்கான புதிய தளம்
மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) வடிவமைத்த புதிய தளத்தின் திறப்பு விழா திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, திடிரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இத்திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
புதிய தளம்
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தளம் வரி செலுத்துவோர், எளிமையாக தங்களது வரிகளை செலுத்த முடியும், மேலும் இத்தளம் வருமான வரித்துறையின் அனைத்து விதமான சேவைகளும் ஒரே முனையில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல்
புதிய அரசின் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது அருண் ஜேட்லி, இடையில் நிற்க முடியாமல் தனது இருக்கையில் அமர்ந்து தான் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
நிர்மலா சீதாராமன்
மேலும் நிதியமைச்சர் பணிகள் அனைத்தும் தற்போது வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications