மும்பை: 50 லட்சம் ரூபாய் லஞ்ச வழக்கில் சிக்கிய சிண்டிகேட் வங்கியின் தலைவர் சுதிர் குமார் ஜெயின் அவர்களை வங்கி நிர்வாக பதவியில் இருந்து நீக்கியது.
இவ்வங்கி பங்கு சந்தைக்கும் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சுதிர் குமார் ஜெயின் அவர்களை வங்கி சட்டத்தின் படி உடனடியாக பதிவியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு இருந்தது.
லஞ்சம்
சிபிஐ பாதுகாப்பில் ஜெயின், சில தனியார் நிறுவனங்களுக்காக கடன் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாகவும், இதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கண்டறியப்பட்டது. மேலும் இத்தகை சிபிஐ சோதனையின் போது கிடைத்தது குறிப்பிடதக்கது.
சோதனையில் சிக்கயது..
ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்த சோதனையில் ஜெயின் அவர்களின் வீட்டில் 21 இலட்சம் ரூபாய் ரொக்கம், 1.68 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், மற்றும் 63 இலட்சம் ரூபாய்கான வைப்புநிதி பத்திரங்கள் சிபிஐ அதிகாரிகள் கைபற்றினர்.
12 பேர் கைது
இவ்வழக்கில் தொடர்புடைய சுதிர் குமார் ஜெயின் உட்பட சுமார் 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதில் புஷன் ஸ்டீல் நிறுவனம் மற்றும் பிரகாஷ் இண்டஷ்ட்ரீஸ் நிறுவன உயர் அதிகாரிகளும் அடக்கம். இவர்களின் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பங்கு சந்தை
ஜெயின் அவர்களின் பணி நீக்கம் மற்றும் சில பல காரணங்களால் சிண்டிகேட் வங்கியின் பங்கு சுமார் 1.80 சதவீதம் சரிந்தது. கடந்த 3 மாதத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 175.65 ரூபாயில் இருந்து 123.35 ரூபாய் வரை குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications