அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை வாயை பிளக்கவைத்த "பட்ஜெட் மங்கள்யான்"

பெங்களுரூ: இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மையில்கல் மங்கள்யான், இஸ்ரோவின் கடுமையான திட்டங்கள், உழைப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடே இந்த மங்கள்யான். மேலும் செவ்வாய் கிரகத்தில் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு தான்.

புதன்கிழமை காலை செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இணைந்த மங்கள்யான் பற்றி பல செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மங்கள்யான் பற்றி இங்கு ஜாலியாக ஒரு ரவுண்டு பார்போம்.

பட்ஜெட் மங்கள்யான்

பட்ஜெட் மங்கள்யான்

அது என்ன பட்ஜெட் மங்கள்யான்.. வல்லரசு நாடு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபட்ட "MAVEN" (நவம்பர் 2013) என்ற விண்களத்தின் மதிப்பு சுமார் 671 மில்லியன் டாலர், அதேபோல் ஐரோப்பா அமைப்பு ESA அனுப்பிய விண்களத்தின் (ஜூன் 2003) மதிப்பு 386 மல்லியன் டாலர், ஜப்பான அனுப்பிய விண்களத்தின் (ஜூலை 1998) மதிப்பு 189 டாலர். இந்நிலையில் இந்திய அனுப்பிய மங்கள்யான் விண்களத்தின் (நவம்பர் 5, 2013) மதிப்பு வெறும் 74 மில்லியன் தான்.

உலக நாடுகளுக்கு ஒரு பாடம்..

உலக நாடுகளுக்கு ஒரு பாடம்..

இத்தகைய குறைந்த விலையில் விண்களத்தை உருவாக்கி வெற்றிக் கண்ட இந்தியா பிற நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது. மேலும் நாசா ஏவிய அதே காலத்தில் இந்தியாவும் ஏவியது குறிப்பிடதக்கது. மேலும் இரு விண்களத்திற்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. நாசா குறிப்பிட்டு இருக்கும் பெயர்களில் சில வித்தியாசம் மற்றும் தனித்தன்மையாக உள்ளது.

டெக்னாலஜி

டெக்னாலஜி

இந்த மங்களயான் விண்களத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி மூலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு ரஷ்யா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்திய சென்றுள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சீன எட்ட முடியாத இடத்தில் சென்றுள்ளது இந்தியா.

கண்காணிப்பு

கண்காணிப்பு

மேலும் இந்த விண்களத்தை தற்போது பெங்களுரூ ISTRAC இல் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இந்தக ஏவுகனையில் காமெராகள், மற்றும் மீத்தேன் வாயுவை கண்டுப்பிடிக்கும் சென்சார், மேலும் காற்றில் இருக்கும் டியூட்டிரியம் மற்றும் ஹைட்ரஜன் அளவை கண்டுப்பிடிக்கும் லைமென் ஆல்ஃபா போட்டோமீட்டர், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும் அனலைசர் MENCA, செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பு மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் ஸ்பெக்ட்டோமீட்டர் ஆகியவை அதில் அடக்கம்.

விண்களம்

விண்களம்

இவ்வணிகளத்தின் மொத்த எடை 15 கிலோ தான். இதற்கு மின் சக்தி 3 சோலார் பேனல் உள்ளது.

நமக்கு என்ன கிடைக்கும்..

நமக்கு என்ன கிடைக்கும்..

இத்தகைய ஆராய்ச்சி எல்லாம் மனிதர்கள் வாழ மற்றொரு கிரகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியே. மேலும் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் என்பதால் அங்கு மனிதர்கள் வாழ எதுவான சூழ்நிலை இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதற்காக தான் உலகில் பல நாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழர்கள்

தமிழர்கள்

மேலும் இத்திட்ட முயற்சியில் தமிழர்களின் பங்கு அதிகளவில் இருந்தது. இந்த மங்கள்யான் விண்களம் மொத்த திட்டத்தின் தலைவராக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுறை மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா அருணன் புராஜக்ட் தலைவராக இருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+