டெல்லி: உலகின் முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய பணக்காரர்களை பற்றி ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது, இந்த வருடம் என்ன பெரிய வித்தியாசம் இருக்க போகிறது என்று நீங்கள் கேட்டுக்கும் வேள்வி, புரிகிறது.
இந்த வருடம் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள எல்லோரும் "பில்லியனர்கள்", பில்லியனர்கள் என்றால் 100 கோடி ரூபாய்க்கும் அதிகாமான சொத்துக்களை உடையவர்கள் என்று பொருள்.மேலும் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சீனாவின் ஹூரன் பத்திரிக்கை நிறுவனமும் தெரிவித்துள்ளது.
மொத்த சொத்து மதிப்பு
இந்த 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டும் 346 பில்லியன் டாலராகும், 2013ஆம் வெளியிடப்பட்ட பட்டியலின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 259 பில்லியன் டாலர் தான். இந்த ஒரு வருட காலத்தில் இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 87 பில்லியன் டாலர் அதாவது 8,700 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கஜினியுடன் போட்டி!!
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 8 வருடமாக முதல் இடத்திலேயே உள்ளார் முகேஷ் அம்பானி. இவருடை சொத்து மதிப்பு கடந்த வருடத்தில் 2.6 பில்லியன் டாலர் உயர்ந்து 23.6 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் இவ்வருடம் இவரது மனைவியை நிர்வாக குழுவில் இணைத்தது பத்திரிக்கைகளில் பெரும் செய்தியாக வந்தது.
புதிய அரசு
மேலும் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் புதிய அரசு இந்திய தொழிற்துறையை ஊக்குவிக்கும் பல முயற்சிகள் செய்து வருகிறது. இதில் இன்று பிரதமர் வெளியிடும் "மேக் இன் இந்தியா" திட்டம் இந்திய தொழிற்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறது.
மேக் இன் இந்தியா
இன்று பிரதமர் வெளியிட்ட மேக் இன் இந்தியா திட்டத்திற்கான புதிய கலக்கலான லோகோ.
மேலும் இப்பட்டியலில் இடம்பெற்ற டாப் 10 பணக்காரர்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பை பார்போம்.
முகேஷ் அம்பானி
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (52) 37 சதவீத வளர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருடை சொத்து மதிப்பு 23.6 பில்லியன் டாலர்.
திலீப் சிங்வி
மருந்து ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் இப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலராகும்.
அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 16.4 பில்லியன் டாலர் மதிப்புடன் இப்பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
பலோன்ஜி மிஸ்திரி
கட்டுமான துறையில் இந்தியாவில் தலைசிறந்தவர்கள் பலர் இருந்தாலும் அதில் முதன்மையானவர் பலோன்ஜி மிஸ்திரி அவர்கள் இவர் இவ்வருடம் 24 சதவீத வர்த்தக வளர்ச்சியுடன் 4வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 15.9 மில்லியன் டாலர்.
லக்ஷ்மி மிட்டல்
எஃகு உற்பத்தியில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முன்னணி நிறுவனமாக திகழும் லக்ஷ்மி மிட்டல் கடந்த மந்தமான வளர்ச்சியால் 5ஆம் இடத்திற்கு சரிந்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 15.8 பில்லியன் டாலர்.
ஹிந்துஜா சகோதரர்கள்
லண்டனில் வாழும் ஹிந்துஜா சகோதரர்கள் இவ்வருடம் தனது வர்த்தகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 6வது இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு 13.3 பில்லியன் டாலர்
ஷிவ் நாடார்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனங்களின் முன்னோடி ஹெச்.சி.எல் இந்நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் 7வது இடத்தில் உள்ளார்.
கோத்ரேஜ் குழுமம்
இந்தியாவில் பல்துறை வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ள பழமையான நிறுவனங்களின் ஒன்றான் கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ் இவ்வருடம் 8 இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 11.6 பில்லியன் டாலர்.
கே.எம்.பிர்லா
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்களம் பிர்லா இப்பட்டியலில் 9 இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டாலர்.
சுனில் மிட்டல்
ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தொலைதொடர்பு சேவையின் மன்னன் இப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர்.


Click it and Unblock the Notifications