இந்தியாவின் பில் கேட்ஸ் இவர் தான்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மென்பொருள் தயாரிப்பு உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் தான் பில் கேட்ஸ், இப்ப இந்தியாவுல யாரு அந்த பில் கேட்ஸ், இன்போசிஸ் நாரயணமூர்த்தியா, இல்ல விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி?? இவர்கள் யாருமே இல்லை.

மென்பொருள் உலகில் கொடிகட்டி பறந்த பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன்பு நிறுவனத்தில் இருந்து விலகி மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை துவங்கினார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர், இவ்வமைப்பிற்கு தனது சொத்தில் பாதிக்கும் மேல் செலவு செய்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் அனில் அகர்வால் தான் பில் கேட்ஸ்.

யார் இந்த பில் கேட்ஸ்.. சாரி அனில் அகர்வால்

யார் இந்த பில் கேட்ஸ்.. சாரி அனில் அகர்வால்

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின், இந்திய கிளையின் தலைவர் மற்றும் நிறுவனரான அனில் அகர்வால் தனது சொத்து மதிப்பில் 75 சதவீதத்தை பில் கேட்ஸ் அவர்களின் அமைப்பிற்கு அளிப்பதாக இவர் அறிவித்தார்.

பில் கேட்ஸின் தாக்கம்

பில் கேட்ஸின் தாக்கம்

கடந்த வாரம் இந்தியா வந்த பில் கேட்ஸ் இந்தியாவின் பல பகுதிகளை கண்ட பின்பு நாட்டின் சுகாதாரம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், நாட்டின் முக்கியமான பகுதிகளில் கூட சரியான கழிப்பிட வசதிகள் இல்லை என்று வருந்தினார். இதனால் நாட்டில் அதிகப்படியான தொற்று நோய்கள் பரவக்கூடம் எனவும் அவர் எச்சரித்தார்.

அனில் அகர்வாலின் சொத்து மதிப்பு
 

அனில் அகர்வாலின் சொத்து மதிப்பு

வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளையின் நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர், இதில் 70 சதவீதம் இந்நிறுவனத்தின் பங்குகள் தான்.

கருத்து கந்தசாமி

கருத்து கந்தசாமி

62 வயதான அனில் அகர்வால் லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு 10 வருட நிறுவன ஆண்டு விழாவில் அவர் "நாம் சம்பாதிக்க வழியை விட்ட இந்த சமுகத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்" என்றும், "இந்த வாழ்கை சம்பாதிப்பதற்காக மட்டும் அல்ல" என்று தனது உரையில் தெரிவித்தார்.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

மேலும் இந்தியாவில் மக்கள் நல பணிகளுக்காக பலர் தொண்டு செய்து வந்தாலும், இதில் முக்கியமாக கருதப்படுபவர் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தான். இவரை தொடர்ந்து ரத்தன் டாடா., நந்தன் நிலக்கேனி என பலர் உள்ளனர்.

கிவ்விங் பெளஞ்

கிவ்விங் பெளஞ்

மக்களுக்கான நலப்பணிகளை செய்ய பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் இணைந்து துவங்கினர். தற்போது இதில் உலகின் பல பணக்காரர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Billionaire Agarwal to Donate Most of Wealth After Meeting Gates

Anil Agarwal, the billionaire founder of Vedanta Resources Plc, said he and his family decided to donate 75 percent of their wealth to charity after meeting Bill Gates, the world’s richest person.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X