நிதி செயலாளரை சந்திக்கும் ரகுராம் ராஜன்!! செப்-30ஆம் தேதி நிதியியல் கொள்கை வெளியீடு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் செப்டம்பர் 30ஆம் தேதி 4வது இரு மாத நிதியியல் மறுஆய்வு கொள்கையை வெளியிட உள்ளார். இதற்காக ரகுராம் ராஜன் நிதியமைச்சகத்தின் செயலாளர் அரவிந்த் மாயாராம் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் வட்டி உயர்வினால் நடுத்தர பொருளாதார நிறுவனங்களை பாதிக்கும் காரணகளை குறித்து பேசினார்.

மேலும் கடந்த முறை வெளியிட்ட நிதியியல் கொள்கையிலும் எந்தவிதமான மற்றமும் ரிசர்வ் அறிவிக்கவில்லை. எனவே இந்த முறை நிச்சயம் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் மாயாராம்

அரவிந்த் மாயாராம்

பொதுவாக இச்சந்திப்பு பிரதமர் மோடியுடன் அல்லது நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் நடந்திருக்க வேண்டும். இந்நிலையில் பிரதமர் அமெரிக்க பயணத்தில் இருப்பதாலும், அருண் ஜேட்லி மருத்துவமனையில் இருப்பதாலும், ரகுராம் ராஜன் அவர்கள் அரவிந்த் மாயாராம் அவர்களை சந்தித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஏபர்ல் -ஜூன் மாத காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதம் என்ற 9 மாத உயர்வை எட்டியது. இதனை அடுத்த காலாண்டுகளிலும் கட்டுப்படுத்தவும், மேலும் அதிகரிக்கும் வண்ணம் ரிசர்வ் வங்கி கொள்கைகளை விடிவமைக்க வேண்டும்.

பணவீக்கம்

பணவீக்கம்

மேலும் இக்காலகட்டங்களில் சில்லறை பணவீக்கம் 7.8 சதவீதமாக கட்டுக்குள் வைக்கப்பட்டது, அதேபோல மொத்த விலை பணவீக்கம் 5 வருட குறைவான 3.7 சதவீதம் எட்டியது குறிப்பிடதக்கது.

மாற்றம் இருக்கும்
 

மாற்றம் இருக்கும்

கடந்த முறை ரிசர்வ் வங்கி வெளியிட்ட கொள்கையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் வெளியிட்டத்து, இதனால் இம்முறை கண்டிப்பாக சில வட்டி வகித மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI Chief Meets Finance Secretary Ahead of Monetary Policy Review

Ahead of the Reserve Bank of India monetary policy review on September 30, the apex bank's Governor, Raghuram Rajan, on Friday met Finance Secretary Arvind Mayaram and is believed to have discussed macroeconomic issues, according to sources.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X