மும்பை: இந்திய பொதுத்துறை வங்கிகள் பிரதமரின் ஜன தண் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி வங்கி கணக்குள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசிற்கு சுமார் 3,500 வைப்பு நிதியாக கிடைத்துள்ளது என மத்திய நிதியமைச்சகத்தின், நிதி சேவை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.
சராசரியாக ஒரு கணக்கிற்கு 800-900 ரூபாய் என்ற வீதத்தில் மத்திய அரசிற்கு 3,500 கோடி ரூபாய் வைப்பு தொகையாக கிடைத்துள்ளது.

மேலும் இந்த கணக்குகள் அனைத்தும் ஆதார் திட்டத்திற்கு இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஜன் தன் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்கி வைத்தார்.
இத்திட்ட துவக்க நாளில் மட்டும் சுமார் 1.5 கோடி வங்கிகணக்குள் துவங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் படி அடுத்த வருடம் குடியரசு நாள் முன் 7.5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. இந்நிலையில் தற்போது 5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பு சிலவற்றை இங்கு பார்போம். இத்திட்டத்தின் வங்கி கணக்கை திறக்கும் நபர்களுக்கு 5,000 வரை ஓவர் டிராப்ட் செய்யும் வசதி உண்டு, மேலும் 1 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக்கான காப்பீடு கிடைக்கும். இதுமட்டும் அல்லாலமல் இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறக்கப்படும் அனைத்து வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளுக்கு ரூபா மூலம் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications