ஹைதெராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓவாக பதவியேற்றிய பின்பு முதல் முறையாக தாய் நாட்டிற்கு சத்ய நாடெல்லா வருகிறார். இப்பயணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய கிளைகளை நேரடியாக பார்வையிடவும், அதிகாரிகளுடன் பேச்சுலவார்த்தையில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளார்.
இதற்கு இடையில் தெலுங்கானா மற்றும் அந்திர மாநில முதல்வர்களை சந்திக்க திட்டமிட்ட அவர், இச்சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்ள தெலுங்கானா அரசை சத்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
ரகசிய சந்திப்பு
ஞாயிற்றுகிழமை மாலை 5 மணியளவில் ரகசியமாக தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் ஒன்றறை மணி நேரம் நீடித்தது. இதில் ஹைதெராபாத் நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது குறித்தும், தெலுங்கானாவை ஐடித்துறையில் முன்னோடியாக மாற்றுவதும் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்ப ஆந்திராவை கைவிட்டாரா சத்ய??
சந்திரசேகர் ராவுடன் ரகசியமாக சந்திப்பு நடைபெற்றாலும், ஆந்திர மாநிலத்தின் முதல்வரான சந்திரபாபு நாயடுவுடன் வெளிப்படையாகவே சந்திப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் சந்திப்பிற்கான நாள் மற்றும் நேரம் முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்திற்கு ஒரு விசிட்
ஞாயிற்றுகிழமை இரவு ஹைதெராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற சத்ய நாடெல்லா, திங்கட்கிழமை அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பில் ஈடுப்படுகிறார்.
இந்திய பயணம்
இவரின் இந்திய பயணத்தில் பல முக்கிய திட்டங்களுடன் வந்துள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் பல நிறுவனங்களில் முதலிடு செய்து வருகிறது அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பாபு காரு
மேலும் அடுத்த 2 நாட்களில் சத்ய நாடெல்லா அவர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு காரு அவர்களை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications