ரூ.2.60 லட்சம் கோடி நேரடி வரி வசூல்!! நிதியமைச்சகம்
டெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை வருவாய் துறை நேரடி வரியாக சுமார் 2.60 லட்சம் கோடி வசூல் செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2014-15ஆம் நிதியாண்டில் செப்டம்பர் 26 வரையிலான காலகட்டங்களில் தோராயமாக சுமார் 3.37 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கார்ப்பரேட் வரியாக இதே காலகட்டத்தில் 1.55 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் தனிநபர் வருமான வரியாக 1.01 லட்சம் கோடி, பரிவர்த்தனை வரியாக 3,222 கோடி ரூபாய் மற்றும் சொத்து வரியாக 357.5 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் வரி வசூல் இலக்கு 7.36 லட்சம் கோடி எட்ட கடுமையான சட்டதிட்டங்களுடன் வரி வசூல் செய்து வருகிறது. இந்த இலக்கு கடந்த வருடம் 6.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications