டெல்லி: உலக சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததன் விளைவாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய அதிகளவில் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதன் படி இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய், பெட்ரோல் லிட்டருக்கும் 1.75 ரூபாய் வரை குறையும் என தெரிகிறது. இதன் மூலம் நாட்டில் உணவு பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
விலை வித்தியாசம்
செப்டம்பர் 16ஆம் தேதி முதல் டீசல் சந்தை விலை மற்றும் இறக்குமதி விலையை ஒப்பிடுகையில் லிட்டருக்கு 35 பைசா வரை வித்தியாசம் இருந்தது, ஆனால் இதே வித்தியாசம் தற்போது 1 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. இதன் மூலம் டீசல் விலை 1 ரூபாய் வரையும், பெட்ரோல் 1.75 ரூபாய் வரையும் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆலோசனை
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பு பற்றி மத்திய இன்று எண்ணெய் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம்
விலை குறைப்பு குறித்து இத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த விலைகுறைப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலகளில் தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி அவசியமாகிறது.
வரலாறு
கடந்த 2009 ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் டீசலின் விலை 2 ரூபாய் குறைத்து 30.86 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பின் இப்போது தான் விலை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அன்று முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 50 பைசா வரை டீசலின் விலை உயர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications