டெல்லி: நிதியமைச்சர் அருண் ஜேட்லி நீரிழிவு நோய் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து கொண்டு வந்தார், இந்நிலையில் கடந்த வாரம் இதற்காக ஓரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் வயிற்றுப் பகுதியில் தொற்று ஏற்பட்டு தற்போது அவரை தனிமைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் அக்டோபர் மாதம் மேற்கொள்ள வேண்டிய அமெரிக்க பயணத்தை ரத்து செய்யும் நிலையில் உள்ளது. அமெரிக்காவுடனான இந்தியாவில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறையில் ஏற்பட போகும் முன்னேற்றத்திற்கு அவரது பயணம் மிகவும் முக்கியமானது.
உலக வங்கி
அக்டோபர் 10-12ஆம் தேதிகளில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உலக வங்கியுடன் சந்திக்கவும், பிற முக்கிய அரசு அதிகாரிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக அவர் வருகிற அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட வேண்டும்.
பிளான் டிராப்
அது குறித்து நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அவர் இருக்கும் நிலையில் அமெரிக்கா வரை சென்று உலக வங்கி அதிகாரிகளை சந்திப்பது சந்தேகத்திற்குரியதே என்று அவர் தெரிவித்தார்.
ஜி20 மாநாடு
இவர் நிதியமைச்சர் மட்டும் அல்லாமல் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், மோடி தலைமையிலான அரசில் இருக்கிறார். இவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இம்மாத துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.
செப்டம்பர் 1
நீரிழிவு நோய்க்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் உடல் எடையை குறைக்க காஸ்டிரிக் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும் சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு இருதைய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க இவரை தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என மருத்துவர் பிரதீப் சாவ்பே தெரிவித்தார்.
பாதிப்பு
மோடி தலைமையிலான அரசில் கடந்த 1 மாதமாக 2 முக்கிய அமைச்சர்கள் (நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்) இல்லாத காரணத்தினால் முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொய்வு இல்லை
நிதியமைச்சர் இல்லாத பொழுதும் பணியில் வேகம் இல்லாவிட்டாலும், தொய்வுப இல்லை என் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்றதில் 584 பில்லியன் டாலர் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மட்டும் குறிப்பிடதக்க அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications