மீண்டும் தல எண்டரி!! நிறுவனத்தின் நிலை என்ன ஆகுமோ...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய மதுபான உற்பத்தி நிறுவனமான யூனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், பல பிரச்சனைக்கு மத்தியில் நிறுவன தலைவராக மீண்டும் விஜய் மல்லையா அவர்களை தேர்வு செய்யப்பட்டார்.

 

பல முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் இந்நிறுவன பங்குதாரர்களை விஜய் மல்லையாவை தேர்வு செய்ய வேண்டாம் என் அறிவுரை செய்தும் அவர்கள் மீண்டும் மல்லையா அவர்களை தேர்வு செய்துள்ளனர்.

வங்கிகள் நெருக்கடி

வங்கிகள் நெருக்கடி

இந்நிலையில் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா விஜய் மல்லையாவை நாணயமற்றவர் என்று அறிவித்துள்ளது, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மீது நிறுவன பணத்தை முறையற்ற முறையில் பிற நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதற்கான விசாரணை உள்ளது. இந்நிலையிலும் இவரை நிறுவன தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் இந்நிறுவன பங்குதாரர்கள்.

நிறுவன கட்டுப்பாடு கைமாறியது

நிறுவன கட்டுப்பாடு கைமாறியது

தற்போது இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் பிரட்டன் நாட்டை சேர்ந்த டியாஜியோ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் லண்டன் மற்றும் நியூயார்க் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பங்கு கையிருப்பு

பங்கு கையிருப்பு

நிறுவன தகவல் படி நிறுவனங்களில் 54.78 சதவீதம் டியாஜியோ நிறுவனத்திடமும், 5 சதவீதம் மல்லையாவிடம் உள்ளது. இந்நிலையில் நிறுவன பங்குகளின் கையிருப்பு அதிகளவில் வைத்திருப்பதால் விஜய் மல்லையா மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சித்தார்த் மல்லையா
 

சித்தார்த் மல்லையா

யூபி குருப் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூபி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.

வங்கிகளின் அடுத்த கட்ட முடிவுகள்

வங்கிகளின் அடுத்த கட்ட முடிவுகள்

யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டும் அல்லாமல் பெடரல் பாங்கு உள்ளிட்ட நான்கு வங்கிகள் இவரை நாணயமற்றவர் என்று அறிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும் அவரது சொத்துகளை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya re-elected as USL chairman

The eagerly awaited fifteenth annual general meeting of India's largest spirits firm United Spirits Limited (USL) on Tuesday, contrary to expectations, turned out to be an uneventful affair with company chairman Vijay Mallya getting re-elected to the post unopposed.
Story first published: Wednesday, October 1, 2014, 15:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X