டெல்லி: இந்திய மக்கள் மத்தியில் பண்டிகை காலத்தை முதலீடு செய்வது பண்டைகாலம் தொட்டு இன்று முதல் வழக்கமாக உள்ளது. இதனால் இப்பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளிவில் வாகனங்கள் வாங்கி வருவதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இத்தகைய வாகன விற்பனைக்கு நிறுவனங்கள்அளிக்கும் அதிரடியான ஆஃபர்களும் முக்கிய காரணம். இதனால் செப்டம்பர் மாதத்தில் வாகனங்களின் விற்பனை கலகட்டியுள்ளதாம்.
ஃபோர்டு
இந்நிறுவனத்தில் உள்நாட்டு விற்பனை குறைந்தாலும் ஏற்றுமதியின் அளவு இருமடங்கானது. செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 3.34 சதவீதம் குறைந்ததுள்ளது. மேலும் இந்நிறுவனம் தற்போது புதிய தயாரிப்பில் பிகோ மாடல் காரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை கண்டிப்பாக இலக்கை எட்டும் என இந்நிறுவனம் நம்புகிறது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1,09,742 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடுகையில், 4.6 சதவீதம் அதிகமாகும்.
ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் மாத கார் விற்பனையினை 51,417லிருந்து, 51,471ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 14.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஹோண்டா
இந்நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தில் 45 சதவீதம் அதிகரித்து, 10,354 என்ற எண்ணிக்கையிலிருந்து, 15,015ஆக வளர்ச்சி பெற்றுள்ளது.
மஹிந்திரா
இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 3.7 சதவீதம் உயர்ந்து, 43,289 என்ற எண்ணிக்கையிலிருந்து, 44,911ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 7.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2,715லிருந்து, 2,503ஆக குறைந்துள்ளது.
ஹோண்டா மோட்டார்ஸ்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனத்தின், இருசக்கர வாகன விற்பனை கடந்த நிதியாண்டின் செப்டம்பரில் விற்பனையை ஒப்பிடுகையில் 33.32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
யமஹா
இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை, உள்நாட்டில், 26.78 சதவீதம் அதிகரித்து, 46,790லிருந்து, 59,325ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications