மொபைல் இண்டர்நெட் கட்டணத்தை 33% குறைத்த எம்.டி.எஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய தொலைதொடர்பு சேவைகளில் விரைவாக வளர்ந்து வரும் பிரிவுகளில் மொபைல் இண்டர்நெட் மற்றும் டேட்டா சேவைகள் மிக முக்கியமானவை. இந்நிலையில் அதிவிரைவான இண்டர்நெட் சேவை வழங்கி அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் மொபைல் இண்டர்நெட் சேவைக்கான கட்டணங்களை லாப நோக்கத்துடன் உயர்த்தி வந்தாலும், சில நிறுவனங்கள் இக்கட்டணங்களை அதிகளவில் குறைத்து வருகிறது.

எம்.டி.எஸ்

எம்.டி.எஸ்

இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இல்லாத எம்.டி.எஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரவும், அதிக வாடிக்கையாளர்களை தன் நிறுவனத்துடன் இணைத்திடவும், இந்நிறுவனம் தனது மொபைல் டாங்கிள் இண்டர்நெட் கட்டணத்தை சுமார் 33 சதவீதம் வரை குறைத்துள்ளது.

கட்டணங்கள்

கட்டணங்கள்

இந்நிறுவனத்தின் எம்பிளேஸ் அல்ட்ரா வை-பை கட்டணம் 1499 ரூபாயில் இருந்து தற்போது 999 ரூபாய் வரை குறைத்துள்ளது. அதேபோல் 10ஜிபி டேட்டா கொண்ட திட்டத்திற்கு தற்போது 1749 ரூபாய் செலுத்தினால் போதும்.

100% கட்டண உயர்வு

100% கட்டண உயர்வு

மேலும் கடந்த 4 மாதங்களில் மொபைல் இண்டர்நெட் கட்டணங்களை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக முக்கிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளது.

3ஜி மற்றும் 4ஜி
 

3ஜி மற்றும் 4ஜி

இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளின் வரவேற்பு சிறப்பாக உள்ளதாகவும், அடுத்த 5 வருடங்களில் இச்சேவையின் மூலம் நிறுவனங்கள் குறிப்பிடதக்க அளவில் லாபங்களை பெரும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

மேலும் இந்தியாவில் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், ஏர்டெல் நிறுவனம் தான் வாடிக்கையாளர் எண்ணிக்கை தான் அதிகம் இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்தின் தரமான சேவை.

சந்தை பங்குகள்

சந்தை பங்குகள்

இந்தியாவில் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மட்டும் சுமார் 57 சதவீதம் சந்தையை பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MTS slashes mobile internet rates

Triggering a price war in the mobile Internet segment, telecom operator MTS India today launched new schemes with a price reduction of about 33 per cent in its high-speed service offerings.
Story first published: Monday, October 6, 2014, 18:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X