இந்தியாவின் வளர்ச்சி 6.4% வரை எட்டும்!! சர்வதேச வங்கிகள் உத்திரவாதம்..

வாஷிங்டன்: மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் வளமையான அன்னிய முதலீட்டின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி அடுத்த இரு வருடங்களுக்கு கண்டிப்பாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. உல க நாடுகளின் ஆண்டு வளரச்சிக்குறித்து வெளியிட்ட "வோல்டு எக்கனாமிக் அவுட்லுக்"அறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி 2014ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாகவும், 2015ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் உயரும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் உலக வங்கியும் 2014ஆம் ஆண்டில் இந்தியாவிந் வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என முன்பே தனது கணிப்புகளை வெளியிட்டது, இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி கண்டிப்பாக உயர்ம் என்பது உறுதியாகியுள்ளது.

வளர்ச்சி பாதையில் இந்தியா!!

வளர்ச்சி பாதையில் இந்தியா!!

2013ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது, சர்வதேச வங்கிகளின் கணிப்புகளின் படி 2014ஆம் ஆண்டில் நாட்டின் வளரச்சி 5.6 சதவீதமாகவும், 2015ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என தெரிகிறது.

சீனாவின் வளர்ச்சி

சீனாவின் வளர்ச்சி

உலகின் முன்றாவது வல்லரசு நாடாக உருவெடுத்து வரும் சீனா கடந்த வருடத்தை போன்றே இந்த வருடமும் 7.4 என்ற வளர்ச்சி விகிதத்தை தொடும் என்றும், 2015ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக குறையும் என்றும் இவ்வங்கிகள் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

மொத்த வளர்ச்சி

மொத்த வளர்ச்சி

இவ்வறிக்கையில் 2014ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் உலக நாடுகளின் வளர்ச்சி 3.5 சதவீதமாகவும், அடுத்த 6 மாதத்தில் 3.8 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வளர்ச்சி முக்கிய பிரச்சனைகளால் குறையவும் வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக போர், தீவிரவாதம், பஞ்சம் மற்றும் பருவ நிலை ஆகியவை வளர்ச்சியின் சரிவிற்கு முக்கிய காரணமாக அமையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி

உலக வங்கி

இந்தியாவின் வளர்ச்சியை பற்றி உலக வங்கி கூறுகையில் தென் ஆசியாவின் 80 சதவீத உற்பத்தி இந்தியாவில் இருந்து கிடைக்கும் தருவாயில் 2014ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 5.6 சதவீதமாகவும், 2016ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என தெரவிக்கிறது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அன்னிய முதலீடு, அதிகப்படியான உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய சாத்தியக்கூறுகள் ஆகியவையே என்று இவ்வங்கிகள் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+