மோடியை சந்திக்கிறார் மார்க்!! லைக்கா?? அன்லைக்கா??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் சமுக வலைதளத்தை சிறப்பாக பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவரான பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சான்பெர்க் அவர்களின் சந்திப்பை தொடர்ந்து நாளை பேஸ்புக் நிறுவனத்தின் சீஇஓவான மார்க் ஜூக்கர்பெர்க் மோடியை சந்திக்கிறார்.

 

இச்சந்திப்பில் இந்தியாவில் குறைந்த விலையில் இண்டர்நெட் சேவையை அளிப்பது பற்றியும், இந்நியாவில் வர்த்தகத்தை பெருக்குவது குறித்து பிற அமைச்சர்களை சந்திக்க உள்ளார் மார்க்.

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

இச்சந்திப்பை எதிர்த்து ராஷ்டிரிய சமையசேவக் சங்கத்தின் உறுப்பினரான கோவிந்தாச்சாரியா, பிரதமருக்கு கடிதத்தின் மூலம் பேஸ்புக், கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை வைத்து பணத்தை மட்டுமே சம்பாதித்துக் கொள்ளகிறது. இந்நிறுவனங்கள் மூலம் இந்தியா வருவாய் பெறும் வகையில் சர்வர்களை அமைக்கும் வரை அவர்களை சந்திக்க வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொண்டார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

மார்க் உடனான சந்திப்பில் இந்தியாவின் இண்டர்நெட் பயன்பாடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் எனவும் இதில் மத்திய அரசின் பங்கு அதிகளவில் இருக்கும் எனவும் பேசப்படுகிறது. மேலும் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவிற்கு அது முதல்படியாகவும், அழுத்தமாகவும் இருக்கும்.

இண்டர்நெட் சேவை
 

இண்டர்நெட் சேவை

வியாழக்கிழமை நடந்த இண்டர்நெட்.ஆர்க் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க் ஜூக்கர்பெர்க் உலகத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்காத 500 கோடி மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் இண்டர்நெட்.ஆர்க் முயற்சி செய்யும் என தெரிவித்தார். இதில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள் பேஸ்புக், எரிக்சன்,மீடியா டெக், நோக்கியா, ஒபேரா, குவால்காம் மற்றும் சாம்சங்.

உங்க பாச்சா இங்கு பழிக்காது..

உங்க பாச்சா இங்கு பழிக்காது..

பேஸ்புக் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியா டாப் 5 இடங்களில் ஒன்று. இந்நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் இருந்து இந்தியாவிடம் வெறும் 0.1 சதவீதம் மட்டும் தான் வருவாய் பெறுகிறது. இதனை அதிகரிக்கவே இந்த சந்திப்பை திட்டமிட்டுள்ளார் மார்க்.

பெரும் தலைகள்

பெரும் தலைகள்

கடந்த ஒரு மாத காலமாக உலகின் பெரும் புள்ளிகளின் தலைகள் இந்தியாவில் அதிகளவில் தென்படுகிறது, இதற்கு முதலில் துவங்கியவர் கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, அவரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ், அமேசான் நிறுவனத்தின் ஜேப் பிசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாடெல்லா, தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க். இதற்கு எல்லாம் என்ன காரணமாக இருக்கும்??? உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Affordable Internet on agenda, Facebook's Mark Zuckerberg to meet Modi tomorrow

After COO Sheryl Sandberg's successful meeting with Prime Minister Narendra Modi, it's now the turn of Facebook founder Mark Zuckerberg to come calling.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X