டெல்லி: இந்தியாவை உலக நாடுகளின் உற்பத்தி மையமாக மற்ற வேண்டும் என்று கூறும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் விற்பனை 1.03 சதவீதம் சரிவடைந்துள்ளது.
விற்பனை சரிவின் மூலம் செப்டம்பர் மாதம் மட்டும் 1,54,882 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் விற்பனை எண்ணிக்கை 1,56,494 வாகனங்களாக உள்ளது குறிப்பிடதக்கது.மேலும் இது விழாகாலம் என்பதால் விற்பனை அதிகரிக்கும் என்ற நினைப்பில் இருந்த விற்பனையாளர்களுக்கு அது சேகமான செய்தியாகவே இருக்கிறது.

இதேகாலகட்டத்தில் இரு சக்கர வாகன விற்பனை சுமார் 19.34 சதவீதம் அதிகரித்துள்ளது, செப்டம்பர் மாதம் மட்டும் 10,56,509 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் வெறும் 8,85,309 விற்பனை செய்யப்பட்டது என் இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பு அமைப்பான SIAM தெரிவித்துள்ளது.
மொத்த இரு சக்கர வாகன விற்பனையில் 23.81 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் வாகன ஏற்றுமதி குறித்து தெளிவாக தகவல் கிடைக்கவில்லை.
மேலும் நாட்டின் மொத்த வாகன விற்பனையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 20.44 சதவீதம் உயர்வை பதவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications