சென்னை: பண்டிகை காலங்களில் மக்களிடையே ஷாப்பிங் மோகம் அதிகமாக இருக்கும். இத்தருணத்தில் கடைகளில் கூட்டம் அலைமோதும், இந்த நெரிசலை தவிர்க பெருவாரியான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சில ஆன்லைன் ஷாப்பிங்கை தேர்ந்தெடுக்கிறார்கள். நல்ல ஐடியா தான், ஆன்லைன் ஷாப்பிங்கிளும் அசத்தலான் ஆஃபர்கள், தள்ளுபடிகள் என குவிந்த வண்ணம் உள்ளது.
ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் நடந்திய பிக் பில்லியன் டேவில் நடந்த குளறுபடிகள் நமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் முன் இதை படித்து விட்டு துவங்கவும்...
வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
இத்தகைய அதிரடி சலுகை அளிக்கப்படுவதால் மக்கள் ஆஃபர்களில் உள்ள சூட்சமம் தெரியாமல் பொருட்களை வாங்க கும்பல் கும்பலாக ஆன்லைன் தளத்திற்கு வருகின்றனர், இதனால் பொருட்கள் வாங்குவதில் போட்டி அதிகரிக்கிறது. ஆஃபரில் 10 லட்சம் பேர் வங்குவதற்காக வந்தால் 50,000 பேருக்கு கூட பொருட்கள் கிடைப்பதில்லை.
லாபம் கடைகாரர்களுக்கு மட்டுமே..
குறைவான பொருட்களை வைத்துக்கொண்டு, அதிரடியான ஆஃபர்கள் அளிக்கப்படுவதாக விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் நிறுவனம் உள்ளது. இந்த விற்பனையில் தள்ளுபடி விலையில் சிலருக்கு மட்டுமே பொருட்கள் கிடைக்கிறது, மற்ற அனைவருக்கும் சாதாரண விலையிலேயே (அதிகப்படியான விலையில்) கிடைக்கிறது. இவை அனைத்தும் கண்கட்டி வித்தை, உங்கள் மனதில் ஆசையை வளர்த்திவிட்டால் நீங்கள் கண்டிப்பாக இந்த பொருளை வாங்கிவிடுவார்கள், இத்தகைய மனநிலை தான் பொருவாரியான மக்களிடம் உள்ளது.
wallet என்னும் புதிய ரூட்...
மேலும் இத்தகைய சிறப்பு தள்ளுபடிகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நிறுவனத்தின் வேலட்டில் (wallet) பணத்தை போட்டு வைப்பதன் மூலம் விரைவாக பொருட்களை வாங்க முடியும் என நிறுவனங்கள் பரிந்துரை செய்கிறது. இதில் என்ன இருக்கிறது, தப்பு எதும் இல்லையே என்று நினைத்தால் அதுதான் முட்டாள்தனம். 1000 பேர் நிறுவனத்தின் வேலட்டில் 10,000 ரூபாய் போட்டு வைத்தால் 1 கோடி ரூபாய், இதற்கு 1 ரூபாய் வட்டி வைத்தால் கூட மாதத்திற்கு 1 இலட்சம் ரூபாய் லாபம்.
வங்கி தகவல்கள்
மேலும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை பயன்படுத்தி விளம்பரம், தகவல்களை விற்றல், சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் தேவையில்லாத கட்டணங்கள் என் திருட்டு வேலைகளில் ஈடுப்படுகிறது.
போட்டி
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது நாம் ஓரே தளத்தில் மட்டுமே நாம் அதிகளவில் வாங்குகிறோம். இந்தியாவில் அமேசான், ஈபே, ஸ்னாப்டீல், பிளிப்கார்ட் என அனைத்துமே சிறந்த சேவை அளிக்கிறது. இந்த போட்டியின் காரணமாக, ஒரு பொருட்களை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முக்கியமான தளத்தில் அனைத்திலும் ஒரு முறை பார்த்த பின் வாங்குவது நல்லது.
பொருட்களை மாற்ற முடியாது..
இத்தகைய தள்ளுபடிகளில் வாங்கும் பொருட்கள் நிறுவனங்கள் மாற்றுவதில்லை, இதனால் பல வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தள்ளுபடிகளை கண்டு மயங்கமால் பொருட்களில் தரத்தை உணர்ந்து வாங்குவதே சரி.
பணம் வாபஸ்
புக் செய்த பொருட்களை கேன்சல் செய்து விட்டால் பணம் கிடைப்பதற்கு 1 முதல் 2 நாள் வரை ஆகிறது. இது அவர்களுக்கு மிக சிறந்த வட்டி லாபம் கிடைக்கும். அதனால் கேஷ் ஆன் டெலிவரி முறையை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது.
மயங்க வேண்டாம்..
ஆஃபர்களை மட்டும் கண்டு மயங்க வேண்டாம். இதற்கு ஒரு உதாரணம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான மின்திரா நிறுவனத்திற்கு ஆடைகளை தயாரித்து தரும் ஒரு நிறுவனத்தில் பேன்ட் ஒன்றின் விலை 400 ரூபாய் மட்டுமே (மின்திரா நிறுவனம் பெறும் விலை வெறும் 300 ரூபாய் தான்), அதே ஆடை இத்தளத்தில் 1790 ரூபாய் ஆனால் தள்ளுபடியில் 600 ரூபாய்க்கு தருவதாக விளம்பரம் செய்து இருந்தது. நிறுவனத்திற்கு 300 ரூபாய் ஆதாவது 100 சதவீத லாபம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications