சென்னை நிறுவனத்தில் ரூ.350 கோடி மூதலீடு!! விப்ரோ ஆசிம் பிரேம்ஜி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, தனது சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் மூலம் சென்னையில் உள்ள வங்கி பேமென்ட் நிறுவனத்தில் 350 கோடி ரூபாய் (57 மில்லியன் டாலர்) முதலீட்டு செய்துள்ளார்.

 

இந்த முதலீட்டின் மூலம் சென்னையே சேர்ந்த பைனான்சியல் சாப்ட்வேர் மற்றும் சிஸ்டம் (FSS) நிறுவனத்தின் குறிப்பிடதக்க அளவு அசிம் பிரேம்ஜி கைபற்றியுள்ளார்.

பிரேம்ஜி இன்வெஸ்ட்

பிரேம்ஜி இன்வெஸ்ட்

இந்நிறுவனம் 2 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை மேம்படுத்தி வருகிறது, இந்நிலையில் இந்தியாவில் 100 வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கு ஏடிஎம், பாயின்ட் ஆஃப் சேல்ஸ், பிரிப்பெயிட் கார்டு, மொபைல் மற்றும் இண்டர்நெட் மூலம் பேமென்ட சேவையை வழங்கும் ஒரு நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார்.

வங்கித்துறை

வங்கித்துறை

விப்ரோ நிறுவனம் வங்கித்துறையில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் முதலீடு விப்ரோ நிறுவனத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

மேலும் பைனான்சியல் சாப்ட்வேர் மற்றும் சிஸ்டம் நிறுவனம் அடுத்த 2 வருடத்தில் பங்கு சந்தையில் குதிக்க உள்ளது இதை கருத்தில் கொண்டு பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார். 2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம்614 கோடி வருவாய் எட்டியது நடப்பு நிதியாண்டில் 850 கோடி ரூபாய் என்ற இலக்குடன் பயணிப்பதாக நிறுவனத்தின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

6 மில்லியன் பரிவர்த்தனை
 

6 மில்லியன் பரிவர்த்தனை

இந்நிறுவனத்திற்கு எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை முக்கிய வாடிக்கையாளராக உள்ளனர். இந்தியாவில் இந்நிறுவனத்தின் சேவைகள் 7,000 நகரங்களில், டவுன் மற்றும் கிராமங்களில் உள்ளது. தினமும் இந்நிறுனத்தின் சேவை மூலம் 6 மில்லியன் பரிவர்த்தனைகள் நடக்கிறது.

வருவாய் இலக்கு

வருவாய் இலக்கு

இந்நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் 2200 கோடி வருவாய் பெறும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளிலும் உள்ளது.

பிரேம்ஜியின் முதலீடு

பிரேம்ஜியின் முதலீடு

பிரேம்ஜி அவர்கள் இந்தியாவில் ஹார்டு ராக் கேஃப், மின்திரா, ஸ்னாப்டீல் மற்றும் மனிபால் குளோபல் கல்வி நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலர் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Azim Premji buys Rs 350-crore stake in Chennai company

Premji Invest, the family investment office of Wipro boss Azim Premji, has invested Rs 350 crore to acquire a minority stake in payments-processing and technology company Financial Software & Systems (FSS).
Story first published: Tuesday, October 14, 2014, 14:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X