ஹெல்சின்கி: 10 வருடத்திற்கு முன்பு இந்திய மற்றும் உலக நாடுகளில் மொபைல் விற்பனையை தன் கால்களுக்கு அடியில் வைத்திருந்த நோக்கியா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் காற்றில் கரைந்து போன கதையாகிவிட்டது. நிறுவனத்தை மொத்தமும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைபற்றிய நிலையில், சென்னை தொழிற்சாலை மட்டும் வரி ஏய்ப்பு வழக்கின் காரணமாக நிலுவையில் உள்ளது.
சென்னையில் உள்ள நோக்கிய தொழிற்சாலையை விற்க வழிவகை செய்து தருவதன் மூலம் வரி ஏய்ப்பு வழக்கும் விரைவாக முடிக்க முடியும், வரித்தொகையும் செலுத்த முடியும் என நோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேரி பிரஞ்சு
இது குறித்து நோக்கிய நிறுவனத்தின் மார்கெட்டிங், கம்யூனிகேஷன் மற்றும் கார்ப்பரேட் விவகார அதிகாரியான பேரி பிரஞ்சு கூறுகையில்,"நிறுவனத்தை விற்க அனுமதி அளிப்பதன் மூலம் தொழிற்சாலை சில மாதங்களில் விற்கப்படும். இதில் வரும் அனைத்து பணத்தையும் escrow கணக்கில் போட்டுவிடுகிறோம். வரி ஏய்ப்பு வழக்கு முடியும் வரை இது எங்களுடையதாக இருக்காது." என அவர் தெரிவித்தார்.
விலை மதிப்பு
நாளுக்கு நாள் தொழிற்சாலையின் மதிப்பீடுகள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், விரைவில் விற்பதன் மூலம் வழக்கின் தீர்ப்புக்கு தகுந்தார் போல் பணத்தை செலுத்த முடியும் என பிரஞ்சு தெரிவித்தார்.
பணிகள் முடக்கம்
கடந்த வாரம் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒரு நவம்பர் 1 முதல் சென்னை தொழிற்சாலையில் பணிகள் முழுமையாக முடக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் வழக்கு
நிறுவனம் முடுவது குறித்தி வி.ஆர்.எஸ் பெறாத 700 பணியாளர்கள் தொழிலாளர் சங்கத்தின் வாயிலாக CITU மூலம் வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளது.
escrow அக்கவுண்ட்
இது என்ன புது கணக்கு?? நமக்கு தெரிந்தது எல்லாம் சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்டு அக்கவுண்ட் மட்டும் தான். escrow அக்கவுண்ட் என்பது முன்றாம் நபர் கணக்கு, வாங்குவேருக்கும் விற்போருக்கும் இடையிலான ஒரு தற்காலிகமான வங்கி அல்லது சேமிப்பு கணக்கு தான் இந்த எஸ்க்குரோ அக்கவுண்ட்.


Click it and Unblock the Notifications