டெல்லி: நிதியமைச்சகத்தின் புதிய தலைமை நிதியியல் ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளதாக வியாழக்கிழமை நிதியமைச்சகம் அறிவித்து. இப்பணியில் முன்பு பணியாற்றியவர் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன்.
ராஜன் ரிசர்வ் வங்கி பொறுப்புகளுக்கும் மாற்றப்பட்ட முதல் இப்பணியிடம் காலியாக உள்ளது. பல கட்ட தேர்வுகள் மற்றும் முடிவுகளுக்கு பின் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷ்னல் எக்னாமிக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான அரவிந்த் சுப்பிரமணியன் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த் சுப்பிரமணியன்
தனது நியமனத்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சுப்பிரமணியன்,"நான் மிகவும் பெருமை அடைகிறேன், மேலும் இந்தியா பொருளாதாரம் தற்போது புதிய வேகத்துடன் வளர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மற்றாத்திலும், வளர்ச்சியில் எனது பணி மதிப்புத்தக்கதாக இருக்கும்." என அவர் தெரிவித்தார்.
3 வருடம்
அரவிந்த் சுப்பிரமணியன் இப்பதவில் 3 வருட கால ஒப்பந்தம் முறையில், மாதம் 80,000 சம்பளத்துடன் பணியாற்றுவார் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொறுப்புகள்
அவரது முக்கிய பணி நிதியமைச்சகம் மற்றும் நிதியமைச்சருக்கும் தேவையான மற்றும் அவசியமான நிதியியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதுமட்டும் இல்லாமல் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதியாண்டின் மத்தியில் பகுப்பாய்வு உருவாக்குதல் போன்றவை. இவை இரண்டும் குளிர்கால கூட்டம் மற்றும் பட்ஜெட் தாக்கலுக்கும் மிக முக்கிய கருவி என்பது குறிப்பிடதக்கது.
கல்வி
அரவிந்த் சுப்பிரமணியன் முதுகலை பட்டம் டெல்லியில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும், எம்.பி.ஏ பட்டம் ஐஐஎம் அகமதாபாத், மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தல் டாக்டர் பட்டம் பெற்றார். மேலும் இவர் வளர்ச்சி, வர்த்தகம், நிறுவனங்கள், எண்ணெய், இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) பற்றி பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications