அன்னிய இருப்புகள் 5 மாத சரிவில் இருந்து மீண்டது!!
மும்பை: 5 மாத தொடர் சரிவிற்கு பிறகு இந்திய அன்னிய செலவானி இருப்பு அக்டோபர் 10ஆம் தேதி 1.310 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியில் இருப்பின் அளவு 312.737 பில்லியன் டாலராக உயர்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி இருப்பின் உயர்வு குறித்த எந்த விதமான காரணங்களையும் தெரிவிக்கிவில்லை, ஆனால் சில நிதிபரிமாற்ற நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி வெளிச் சந்தைகளில் இருந்து அதிகப்படியான டாலரை பெற்றுள்ளது என்று கூறுகிறது.
இதற்கு முன் கடந்த 5 வருடத்தில் 7.2 பில்லியன் டாலர் அன்னிய இருப்புகள் குறைந்தது குறிப்பிடதக்கது.



Click it and Unblock the Notifications