விமான போக்குவரத்தில் பிரட்டனை பின்னும் தள்ளும் இந்தியா!!

டெல்லி: 2034 ஆம் ஆண்டிற்குள் இந்தியா அதிவேக வளர்ச்சி கொண்ட ஒரு சந்தையாக உருமாறும் என பன்னாட்டு விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் (ஐஏடிஏ), வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த 20 ஆண்டிற்கான அந்த அமைப்பின் பயணிகள் போக்குவரத்து கணிப்பின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரும் விமானப் போக்குவரத்து சந்தையாக மாற வாய்ப்புள்ளதாகவும், முதல் ஐந்து பெரும் சந்தைகளில் ஒன்றாகவும் விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது மிகப்பெரிய சந்தை

3வது மிகப்பெரிய சந்தை

"பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சியின் அடிப்படையில் சீனா முதல் இடத்தையும் (ஆண்டிற்கு 85.6 கோடி கூடுதல் பயணிகள்), அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் (ஆண்டிற்கு 55.9 கோடி கூடுதல் பயணிகள்), இந்தியா மூன்றாவது இடத்தையும் (ஆண்டிற்கு 26.6 கோடி கூடுதல் பயணிகள்) இந்தோனேஷியா நான்காவது இடத்தையும் (ஆண்டிற்கு 18.3 கோடி கூடுதல் பயணிகள்) மற்றும் பிரேசில் ஐந்தாவது இடத்தையும் (17 கோடி கூடுதல் பயணிகள்) பிடிக்கும்" என ஐ.ஏ.டி.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணிகள் எண்ணிக்கை உயர்வு

பணிகள் எண்ணிக்கை உயர்வு

மேலும் இந்த அறிக்கை உலகில் தற்போது ஒன்பதாவது இடத்திலுள்ள இந்தியா 26.6 கோடி கூடுதல் பயணிகளுடன் 36.7 கோடி பயணிகள் என்ற அளவை எட்டி 2034ஆம் ஆண்டிற்குள் உலகல் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா விமான போக்குவரத்தில் செவ்வன திகழும் எனவும் தெரிவிக்கிறது.

பிரிட்டன்

பிரிட்டன்

"2031 ஆம் ஆண்டிற்குள் தற்போது மூன்றாம் இடத்திலிருக்கும் பிரிட்டனை (யுனைடெட் கிங்டம், 148 கூடுதல் பயணிகள் மற்றும் 33.7 கோடி மொத்த பயணிகள்) இந்தியா முந்தும்" எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

6.9 சதவித வளர்ச்சி

6.9 சதவித வளர்ச்சி

ஐ.ஏ.டி.ஏ கூற்றுப்படி இந்தியா விமானப் போக்குவரத்து சந்தை 6.9 சதவித வளர்ச்சியினை இந்த காலகட்டத்தில் எட்டும் எனவும் இதில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 15.9 கோடி அதிகரித்து 21.5 கோடியாக உயரும் எனவும் தெரிகிறது.

விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து

இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐபிஇஎப் அமைப்பு கணிப்பின் படி விமான போக்குவரத்தில் இந்தியா 2020 ல் உலகின் மூன்றாவது பெரிய சந்தையாகவும் 2030 க்குள் உலகின் அதிமுக்கிய சந்தையாகவும் உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

16 பில்லியன் டாலர்

16 பில்லியன் டாலர்

சந்தை அளவின் அடிப்படையில், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தொழில் உலகில் உள்ள பத்து மிகப்பெரும் தொழில் நாடுகளில் ஒன்று. இதன் ஒட்டு மொத்த மதிப்பு 16 பில்லியன் அமேரிக்க டாலர்களாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+