பெங்களுரூ: இந்திய பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம் 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவன பங்குகளை கைபற்றியதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு இருப்பு 3.25 சதவீதத்தில் இருந்து 4.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா பதவியேற்றிய பின் எல்.ஐ.சி நிறுவனம் இரண்டு முறை இந்நிறுவனத்தின் பங்குகளை கைபற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
நிறுவனத்தின் நிலையற்ற நிலை..
இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1 வருடம் சந்தித்த பிரச்சனைகளில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரடியாக குறைந்தசு. இதன் மூலம் எல்.ஐ.சி நிறுவனம் கடந்த ஜூன் 30,2013ஆம் ஆண்டு 6.72 சதவீதமாக இருந்த பங்கு இருப்பை 3.2 சதவீதமாக குறைத்து கொண்டது குறிப்பிடதக்கது.
பங்கு மதிப்பு
எல்.ஐ.சி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு இருப்பை அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பிற சாப்ட்வேர் நிறுவனங்களை போல அல்லாமல் குறைந்த அளவான சரிவையே சந்தித்தது. இன்றயை வர்த்தக துவக்கத்திலும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவுடனே துவங்கியது.
35 புள்ளிகள் சரிவு
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 34.65 புள்ளிகள் சரிந்தது 3,817 ரூபாய் என்ற அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது.
இன்போசிஸ் நிறுவனர்கள்
இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. ஆனால் டெக்னாலஜி பற்றி விழிப்புணர்வு கொண்ட முதலீட்டாளர்கள் இன்போசிஸ் நிறுவன பங்குகளை மிகுந்த நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications