பெங்களுரூ: அக்டோபர் 6ஆம் தேதி பிளிப்கார்ட் நிறுவனம் நடந்திய பிக் பில்லியன் டேவில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் வியாபாரிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளதாகவும் புகார்கள் வர்த்தக மற்றும் தொழிற்துறைக்கு வந்தது.
இதையடுத்து இத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என்றும் புதிய சட்ட திட்டங்கள் அமைக்கப்படும் என்று கூறியதாக தகவல்கள் பத்திரிக்கைகள் மற்றும் ஊடங்கள் தெரிவித்து வருவது பொய்யானது என்று அவர் இன்று தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் தான் இப்புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்று மட்டுமே கூறியதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
புகார்களில் இருந்து மன்னிப்பு வரை...
பிக் பில்லியன் டேவில் நடந்த குளறுபடிகளில் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது, இதனால் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்குமாறு புகார்களை அளித்தனர். இப்பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள நடந்த குளறுபடிகளுக்கு பிளிப்கார்ட் நிறுவன தலைவர்கள் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடதக்கது.
விசாரணை
மேலும் தொழிற்துறைக்கு கிடைத்துள்ள புகார்களின் பேரில் பிளிப்கார்ட் நிறுவன தலைவர்களிடம் தொழிற்துறை அமைச்சகம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் விசாரணை செய்து வருகிறது.
பெங்களுரூ
காபி துறையின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களுரூ வந்த நிர்மலா சீதாராமன் பாஜக தலைமை அலுவலகத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மீது வழக்கு எதும் தொடுக்க போவதில்லை, விசாரணை மட்டுமே நடந்த திட்டமிட்டுளோம். விசாரணையின் முடிவில் நிலவரம் தெரிய வரும் என பத்திரிக்கையாளர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.
புதிய சட்ட திட்டங்கள் எல்லாம் இல்லை...
இத்தகைய புகார்களின் மூலம் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் புதிய சட்டதிட்டங்களை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளதாக வந்த செய்திகளை மறுத்துளார் நிர்மலா சீதாராமன்.
ஆன்லைன் வர்த்தகம்
பிளிகார்ட் நிறுவனத்தின் இந்த குளறுபடிகள் மூலம் நாட்டின் ஆன்லைன் சந்தை வர்த்தகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்படும் என்று நினைத்த பலருக்கும் இது ஆச்சரியமாக இருக்கும். தற்போது வெறும் விசாரணை மட்டும் தானாம்...
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications